அடுத்த மாஸ்டர் பிளானுக்கு தயாராகும் அமித்ஷா குடியரசுத் தலைவரை சந்தித்ததன் முக்கிய காரணம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்த நிலையில் புதிய அமைச்சகம் ஒன்று உருவாக்கி அதற்கு கூட்டுறவுத்துறை என்று பெயரிட்டு அத்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா கூடுதலாக கவனிக்க உள்ளார்.

இந்த கூட்டுறவுத்துறை மாநிலங்களில் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசு தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாக கூட்டுறவுத்துறை உருவாகியுள்ளதால் மாநில அரசுகளின் கையில் உள்ள கூட்டுறவு துறை வங்கிகள் மற்றும் செயல்பாடுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து.

அதன் மூலம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கூட்டுறவுத்துறை மூலம் அதிக நிதி வருவாய் கிடைத்து வரும் நிலையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு துறை வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டுள்ள. இந்த அமைச்சகம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களின் கூட்டுறவுத் துறையின் வருவாயை பங்கு போடும் திட்டத்தோடு மத்திய அரசு இந்த துறை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் உள்துறை மற்றும் மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பே பல்வேறு அதிரடியான சட்டங்களை மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அமைச்சரவை கொண்டுவந்துள்ள நிலையில் மேலும் பல சட்டங்கள் வர உள்ளது.

எது நடந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Exit mobile version