‘அமேசான்’ நிறுவனத்துக்கு தடை…

‘விதிகளை மீறி செயல்படுவதால், ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என, எஸ்.ஜே.எம்., எனப்படும் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கிளை அமைப்பான ‘சுதேசி ஜாக்ரன் மஞ்ச்’ எனப்படும் சுதேசி விழிப்புணர்வு அமைப்பின் தேசிய கூட்டம், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சமீபத்தில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் செயல்படும் அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட் போன்ற பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நம் நாட்டின் நேரடி அன்னிய முதலீட்டு கட்டுப்பாடுகளை பகிரங்கமாக மீறி செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2017- 18ம் ஆண்டிலிருந்து 2019 – 20 வரை மட்டும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் சட்ட நடவடிக்கைகளுக்காக 9,788கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக தன் வரவு – செலவு கணக்கில் காட்டியுள்ளது. லஞ்சம்ஆனால், இந்த பணம் இந்தியாவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டத்தை மீறுவதற்காக செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


அமேசான் மட்டுமின்றி மேலும் பல பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களும் இந்தியாவில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டத்தை மீறுகின்றன. இதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் அமேசான், பிளிப்கார்ட், வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்பட வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.இந்த நிறுவனங்களின் விதி மீறல்கள் பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version