சென்னையில் ஆரம்பித்தது அராஜகம்! காவல் நிலையத்தில் புகுந்து தி.மு.க பிரமுகர் மிரட்டல்!

கடந்த மாதம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்தது. ஆண்ட்ரே திமுகவினர் தங்களின் அராஜகத்தை கையில் எடுத்தனர். அம்மா உணவகத்தை தாக்கினார்கள். அம்மா மினி கிளினிக்கள் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்தேறியது. மேலும் தஞ்சாவூரில் திமுகவினரை எதிர்த்து கேள்வி கேட்ட காவலர் இடம் மாற்றப்பட்டார்.

இதே போல் சம்பவம் தற்போது சென்னையில் நடந்துள்ளது. சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் ஒருவர் காவல்நிலையத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை 14 ஆம் தேதி இரவு அபிராமிபுரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தாக்கி அவரிடமிருந்து அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் ராஜேஷ் அவர்கள் படுகாயமடைந்தார். அவரின் தலையில் 8 தையல் போடப்படுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அபிராமிபுரம் காவல்துறை வி.சி.தோட்டத்தைச் சேர்ந்த பி.சுப்பிரமணி (25), எம்.வீரா (21), ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஆர் சரத்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் காவல் நிலையம் வந்த, 123 வது வார்டு திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட மூவரையும் காவல்துறை கஸ்டடியில் எடுக்க வேண்டாம் என்று என்றும் தான் ஏற்கனவே ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரிடம் பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுக்கவே அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அங்கு நடந்த வாக்கு வாதத்தினை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்துள்ளார்கள் . தற்போது அந்த வீடியோவானது காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டரை நிமிட வீடியோவில், திமுக பிரமுகர் ராஜேந்திரன் அவர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதையும், அதிகாரிகளை ‘மைலாப்பூர் எம்.எல்.ஏ’விடம் பேசும்படி கேட்டுக்கொள்வதையும் தெளிவாக பதிவாகியள்ளது. மேலும் இந்த வாக்குவாதத்தில், அதிகாரிகளை அச்சுறுத்திய பின்னர் ராஜேந்திரன் நிலையத்தை விட்டு வெளியேறினார் என்று ஒரு அதிகாரி கூறினார். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்..

Exit mobile version