மாலைகள் இட வேண்டாம் சால்வைகள் போட வேண்டாம் ! அண்ணாமலையின் அன்பு கட்டளை !

மாலைகள் இட வேண்டாம் சால்வைகள் போட வேண்டாம்! அண்ணாமலையின் அன்பு கட்டளை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை ராமேசுவரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.

செல்லும் வழியெங்கும் அவருக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. புகார் பெட்டியுடன் செல்லும் அண்ணாமலை மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிவருகிறார். இந்தநிலையில் நடைபயணத்தின் 9-ம் நாளான சனிக்கிழமை மதுரையில் நடைபயணம் மேற்கொண்டார் . மதுரை மாவட்ட பாஜகவினர் மாலைகள் மற்றும் சால்வைகள் அணிவித்து தடபுடலாக அண்ணாமலையை வரவேற்றார்கள்

அப்போது பேசிய பா.ஜக தலைவர் அண்ணாமலை

2000 ரூபாய் செலவழித்து எனக்கு பூ மாலை போடுகிறீர்கள்.சில நொடிகளில் அதை எடுத்து விட்டு அடுத்த மாலை.  காலை மட்டும் இப்படி 120 மாலைகள்..எத்தனை பண விரயம்.. அது போக இந்த பகுதியில் மட்டுமே 320 சால்வைகள் அதில் பெரும்பாலும் சீன இறக்குமதி தான் 

எவ்வளவு பெரிய பொருளாதார சீர்கேட்டை நாம் செய்கிறோம்னு யோசிச்சு பாருங்க, தவறாக நினைக்க வேண்டாம்.இந்த யாத்திரை என்பது பொது மக்களை சந்தித்து அவர்களின் குறையை நேரிடையாக கேட்பதற்கு. நம் மோடிஜியின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதயாத்திரை. என்னை அவர்களை சந்திக்க விடுங்கள்…

குறைந்த பட்சம் மத்தியில் நாம் ஆட்சியில் இருப்பதால் ஒரு 20% குறையை நாம் தீர்த்து வைக்க முடியும்.
இது கட்சி நிகழ்ச்சி அல்ல.கட்சி நிகழ்ச்சி நடக்கும் போது இதை வைத்து கொள்ளலாம்.நீங்கள் கேட்கும் செல்ஃபி ஃபோட்டோக்களை முடிந்தவரை எடுத்துக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இன்னும் 200 தொகுதிகளுக்கு மேல் போக வேண்டியது உள்ளது.அனைத்து தொகுதிகளிலும் கட்சிக்காரர்கள் இதனை பின்பற்றுமாறு வேண்டிக்கொள்கிறேன்எனக்கு மாலைகளும் சால்வைகளும் வேண்டாம் என மதுரை நடைபயணத்தின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Exit mobile version