யாரால் தோற்றார் அண்ணாமலை ?

அண்ணாமலையினை இஸ்லாமியர்கள் தோற்கடித்துவிட்டார்கள் என புலம்புவதில் அர்த்தமில்லை, இங்குள்ள திராவிட கும்பல் கட்டமைத்திருக்கும் அயோக்கிய கற்பனைகள் அப்படித்தான் செய்யும்

காமராஜரும் நேருவும் மதசார்பற்ற இந்தியா கண்ட காலங்களிலே அவர்களுக்கு எதிராக திராவிட கும்பலிடம் சரணடைந்த காயிதே மில்லத்தின் கட்சி அப்படித்தான் போதிக்கும்

ஆம், அப்பொழுதே அவர்களுக்கு இந்திய தேசியம் மேல் நம்பிக்கை இல்லாமல் அதுவும் நேரு இருக்கும் பொழுதே நம்பிக்கை இல்லாமல் திமுக தனி திராவிட நாடு காணும் என நம்பி சென்ற சமூகம் அது

எவ்வளவோ இடங்களில் இந்துக்களின் வோட்டு எந்த முணுமுணுப்புமின்றி இஸ்லாமிய வாக்களர்களுக்கு விழுந்த மாநிலத்தில் இஸ்லாமியர் வாக்குகள் இந்துவுக்கு இல்லை என்பதெல்லாம் “மதசார்பற்ற” நிலை என்றுதான் கருத வேண்டும் என்பார்கள்

திமுகவுக்கு இஸ்லாம் சமூகம் எப்பொழுதும் பக்கபலம் சந்தேகமில்லை

ஆனால் எத்தனை இஸ்லாமிய மக்களை திமுக கைதூக்கிவிட்டது அல்லது உரிய அங்கீகாரம் கொடுத்ததென்றால் இதுவரை இல்லை

மத்தியில் வாஜ்பாய் காலம் தொடங்கி மன்மோகன் காலம்வரை இருந்தபொழுது எந்த இஸ்லாமியருக்கு பதவி வழங்கினார்கள்?

திமுக அனுப்பிய மேல்சபை எம்பிக்களில் இன்றும் எவ்வளவு இஸ்லாமியர் உண்டு, ஒருவரை காட்ட முடியுமா?

இப்பொழுதும் திமுக அமைக்கும் மந்திரிசபையில் ஒரு இஸ்லாமிய சபாநாயகர், ஒரு வலுவான துறைக்கு இஸ்லாமிய அமைச்சர் என காட்ட முடியுமா?

மாட்டார்கள், செய்யவே மாட்டார்கள்

இதெல்லாம் இஸ்லாமிய மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம், அவர்களோ யோசிப்பதாக இல்லை

பாஜக செய்யவேண்டியது அது பிராமண கட்சி அல்ல என்பதை நிரூபிப்பதற்காக முருகன் போன்றோரை தலைவராக்கி வளர்ப்பது போல நாட்டுபற்றுள்ள இஸ்லாமியர் பலரை கட்சியில் சேர்த்து நல்ல பதவியும் பொறுபும் கொடுத்து நம்பிக்கை ஊட்ட வேண்டும்

அந்த தயாரிப்பினை முதலிலே செய்யாமல், பள்ளபட்டி பள்ளத்தில் தள்ளும் என தெரிந்தும் அரவகுறிச்சியில் நின்றது அண்ணாமலை தவறு, அதை கேட்டு வாங்கியது பாஜக தவறு

எல்லா தவறுகளையும் மிகபெரிய தப்புகளையும் உங்கள் மேல் வைத்து கொண்டு , பள்ளபட்டி மக்களுக்கு ஆலோசனை சொல்லவோ, உறவுகரம் நீட்டவோ ஒன்றுமில்லை, என்ன கரம் நீட்டினாலும் அவர்கள் அதை பற்றபோவதுமில்லை

இஸ்லாமிய சமூகம் மிகபெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றது, திராவிட கும்பல் அப்படி அவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து வாக்கினை மட்டும் வாங்கி அவர்களை கறிவேப்பிலை போல் வைத்திருக்கின்றது

அதை உணரவையுங்கள் அவர்கள் சிந்திக்கட்டும்

இதோ சிரியாவிலும், ஈராக்கிலும், ஆப்கனிலும், ஏமனிலும், லிபியாவிலும் இன்னும் எங்கெல்லாமோ இஸ்லாமியர் அனுதினமும் செத்து கொண்டிருக்கின்றனர்

யார் கொல்கின்றார்கள்? சங்கிகளா, இல்லை சக இஸ்லாமியர்தான் அவர்களை கொல்கின்றார்கள்

இங்கே இஸ்லாமியர் இவ்வளவு பாதுகாப்பாக வாழ யார் காரணம்? சாட்சாத் இந்துக்கள்தான் காரணம்

ஈரான் போல், சவுதி போல், ஆப்கன் போல் கடும் இறுக்கம் இல்லாமல் இஸ்லாமியர் வாழ யார் காரணம்? இந்த சங்கிகள் தேசமே காரணம்

ஈரான் போன்ற கடும்போக்கு நாடுகளில் இல்லா பெண் சுதந்திரமும், பெண் பாதுகாப்பும், மண உறவு பாதுகாப்பும் யார் கொடுத்தது? இந்த சங்கிகளின் தேசம் கொடுத்தது

இதை எல்லாம் என்று அந்த இஸ்லாமிய சமூகம் புரிந்து கொள்ளுமோ அன்றுதான் சிந்திக்கும், பாஜகவினை ஏற்கும்

அதுவரை திமுக அவர்களை பயன்படுத்தும், அது அவர்கள் அரசியல். அதில் இவர்கள் பிரியாணி ஆடுபோல் சிக்கிகொள்வது அவர்கள் விதி

ஆக இஸ்லாமியரை சிந்திக்க சொல்லுங்கள், அதற்கான காரணங்களை உதாரணங்களை எடுத்து அவர்கள் முன் வாதிடுங்கள், அவர்கள் தங்களின் இந்த தேசத்தின் பெரும் தாத்பரியத்தையும் இந்து மக்களின் பெருந்தன்மையான உணர்வுகளையும் புரிந்து கொள்ளட்டும், தேசத்தின் அருமையும் அதற்கு எதுதேவை என்பதையும் புரிந்து கொள்ளட்டும்

அதுவரை பள்ளபட்டி தனியே நிற்கட்டும், அப்படி நிற்பது வரை லாபம் திமுக கம்பெனிக்குத்தானே தவிர அவர்களுக்கு இல்லை

இதேதான் கிறிஸ்தவ சமூகத்துக்கும்

இதோ திமுக அமைச்சரவை பட்டியல் வருகின்றது, கிறிஸ்தவர்கள் யாராவது அப்பட்டியலில் வருவார்களா என்றால் இல்லை, மாட்டார்கள்

மைனாரிட்டி கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இன்னும் பல நாடுகளிலும் படும்பாடு சொல்லிமாளாது, ஆனால் இத்தேசம் கொடுத்திருக்கும் அபரிமிதமான மத உரிமை இந்த கோஷ்டிகளை சிந்திக்க விடவில்லை

இஸ்லாமியரும், கிறிஸ்தவரும் முழுக்க சிந்திக்கட்டும், அவர்கள் சிந்திக்கும் விதமாகவும் அவர்களை அணைக்கும் விதமாகவும் பாஜக தன் அரசியலை முன்னெடுக்கட்டும்

அதுதான் அவசியமே தவிர அனாவசிய புலம்பல்கள் அல்ல, இனிதான் பாஜகவின் காலமே இருக்கின்றது

திமுக அரசை கண்கொத்தி பாம்பாக கவனித்து அதன் மக்கள் விரோத இந்துவிரோத போலி சமூக அக்கறையெல்லாம் சாடி மக்களிடம் அதை தோலுரித்துகாட்டும் மிகபெரிய கடப்பாடு இருக்கின்றது

அதிமுக சரிந்துவிட்ட நேரம் திமுகவுக்கு கடிவாளம் போட யாருமில்லை

நிச்சயம் பாஜகவின் பொன்னார், இல கணேசன் போன்ற சீனியர் காவிகள் அதை செய்யமாட்டார்கள், அவர்களின் மனம் அப்படியான திராவிட மனம்

முருகன் போன்றவர்கள் எம்மாதிரி அரசியல்வாதி என்பதே தெரியவில்லை, சூனியமாகவே அவர் முகம் எப்பொழுதும் இருளடைந்து கிடக்கின்றது.

இந்நேரம் அண்ணாமலை போன்றவர்கள் முழு வீச்சாக திமுகவினை கண்காணித்து அதன் எல்லா மக்கள் விரோத, தேசவிரோத காரியங்களையும் எதிர்த்து உண்மையினை உரைத்தல் வேண்டும்

இப்போதைக்கு மக்கள் நடுவில் இருக்கும் எதிர்கட்சி தலைவர் அண்ணாமலைதான்

அவரை அந்த கடமையினை ஆற்றவிடுங்கள், அவரை ஒரு வார்டு கவுன்சிலர் போல் ஆக்கிவிடாதீர்கள்.

அண்ணாமலையின் பலமும் ஆற்றலும் அனுபவமும் கல்வியும் அனுமன் போல் பெரிது

காவல்துறையினை திமுக ஏவிவிட்டால் ஒரு கமிஷனராக அவரால் பல விளக்கங்களை கொடுக்க முடியும்

தமிழக பட்ஜெட்டில் கோளாறு இருந்தால் அவரால் விளக்க முடியும்

திமுக தேசபாதுகாப்பில் சொதப்பினால் இல்லை உளவுதுறை சொதப்பல் தீவிரவாத கண்காணிப்பு கடத்தல் தடுப்பில் சொதப்பினால் அவரால் உரிய கேள்விகளை கேட்க முடியும்

அவருக்கான தேவையும் அவசியமும் இங்கு நிரம்ப இருக்கின்றது , அவரை தயவு செய்து பள்ளபட்டி பக்கத்திலே நிற்க வைத்து அழுது கொண்டிருக்காதீர்கள்

அவர் தமிழ்நாட்டின் மிக பெரிய நம்பிக்கை , தமிழகத்தின் நிஜமான எதிர்கட்சி தலைவர், அவருக்குரிய கடமையினை ஆற்ற உற்சாகமாக கைதட்டி வரவேற்றுகொள்ளுங்கள்

இதோ நாம் வரவேற்பதை போல…

கட்டுரை :- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version