அரசியல் புரோக்கர் வைகோ அண்ணாமலை பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை ! எஸ்.ஜி.சூர்யா.

தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் SG.சூர்யா மதிமுக தலைவர் வைகோவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அதில், நேர்மைக்கும், உண்மைக்கும் சம்பந்தமே இல்லாத தி.மு.க-வுக்கு விலைபோன திரு.வைகோ,பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை !

தமிழக பா.ஜ.க தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கையாலாகாத தமிழக தி.மு.க அரசு, கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு எப்படியெல்லாம் விலைபோனது என்பதை படம் பிடித்துக் காட்டினார். பேபி அணை பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் திரு.பிணராய் விஜயன் அனுமதி அளித்துள்ளதாக கூறி அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அப்படி ஒரு
அனுமதியை கேரள கம்யூனிஸ்ட் அரசு வழங்கவில்லை என பின்வாங்கி, பிறகு தங்களுக்கு தெரியாமல் அனுமதி வழங்கப்பட்டது என பல்டியடித்து அந்த அனுமதியை திரும்பப்பெற்று, அதை வழங்கிய அதிகாரியை பணி நீக்கமும் செய்துள்ளது.

கேரள அரசு அனுமதி அளித்துள்ளதா, இல்லையா என்பதை கூட தெரியாத ஒரு திறமையற்ற முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது என்பதை நவம்பர் 8-ஆம் தேதி தேனியில் நடைபெற்ற தமிழக பா.ஜ.க-வின் “முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு போராட்டத்தில்” அம்பலப்படுத்தினார் திரு.அண்ணாமலை.


அதோடு அணையின் நீர்மட்டம், 152 அடியாக இருந்த போது 2.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது என்பதையும், அதன் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்ட பின்னர் பாசன பரப்பளவு 71,000 ஏக்கராக சுருங்கி விட்டது என்ற உண்மையையும் தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறினார். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் தி.மு.க-வால் எப்படி எல்லாம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் பட்டியலிட்டார். கையாலாகாத தி.மு.க அரசால் இப்போது முல்லைப் பெரியாறு அணை உரிமையை எப்படியெல்லாம் பறிகொடுக்கப்பட்டு
வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.


அதோடு, முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் கோபாலபுரத்து குடும்பத்திற்கு நிலம் எதுவும் இல்லை. ஆகவே தான் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், முல்லைப் பெரியாறு அணை உரிமையை கேரளாவுக்கு தாரைவார்த்து விட்டார் என்ற உண்மையையும் போட்டு உடைத்தார்.


இவைகளுக்கு நேரடியாக பதில் சொல்ல திராணி இல்லாத முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின், தன் அறிவாலயத்துக்கு விலைபோனவர்களில் ஒருவரான திரு.வைகோவை ஏவி விட்டுள்ளார்.அவரும் தன் பங்கிற்கு தனது எஜமானியை விஸ்வாசத்தை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version