கஷ்டப்பட்டு படிக்காமல் பட்டம் வாங்கணும் என்றால் கலைஞர் குடும்பத்தில் தான் பிறந்து இருக்கவேண்டும் :-அண்ணாமலை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும்,தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் 2017,2018 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு குறித்த தரவுகளை மட்டும் எடுத்து கொண்டுள்ளார்கள். 2020 ல் நடத்தப்பட்ட நீட் தேர்வு குறித்து தரவுகள் எடுக்கப்படவில்லை. 2020-ல் நடந்த நீட் தேர்வை எந்த விதத்தில் ஆய்வு செய்து பார்த்தாலும், சமூகநீதியைத் தாண்டி, நீட் வெற்றி பெற்றுள்ளது. எல்லா சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்காக நன்றாகப் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை, நீட் வராது, படிக்காதீர்கள் என்று தேர்தலுக்காகக் கூறிவிட்டு, தற்போது 3 மாதத்தில் நீட் தேர்வுக்கு தயாராகுமாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், 3 மாதத்தில் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்து காட்டட்டும்”

கஷ்டப்பட்டு படிக்காமல் பட்டம் வாங்கணும் என்றால் கலைஞர் குடும்பத்தில் தான் பிறந்து இருக்கவேண்டும் :- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணல் பறக்க பேசியுள்ளார்.

Exit mobile version