ஹாட் பாக்ஸ், கொலுசு, பணம் இதுதான் திராவிட மாடல் வெற்றியா? அண்ணாமலை அதிரடி !

சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக கட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் கூறினார். 

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க அற்புதமான வெற்றியை பெற்றுள்ளது. பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் எங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் இல்லையோ அங்கெல்லாம் பா.ஜ.க வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தார்.

கட்சியை வலுபடுத்துவதற்காக மோடியின் கொள்கைகளை வீடு தோறும் கொண்டு சேர்க்க தனித்து போட்டியிட்டதாகவும் மக்கள் மகத்தான வெற்றியை தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுக கட்சிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாக  கூறினார்.தமிழகத்தில் வாக்கு சதவீகித அடிப்படையில் பா.ஜ.கவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளதாக அவர்  தெரிவித்தார்

மக்கள் தேசியத்தின் பின்னால் திரும்பியுள்ளதற்கு இந்த தேர்தல் ஒரு சாட்சி எனவும், தமிழக மக்கள் பா.ஜ.கவை முழுமையாக ஏற்று கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.கொங்கு மண்டலத்தில் பரவலாக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், சென்னையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல மேலும் தமிழகத்தில் பா.ஜ.க வளர உறுதுணையாக இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.கொங்கு மண்டலத்தில் அதிமுக – பா.ஜ.க கூட்டணி இணைந்து போட்டியிடும் போது கொங்கு மண்டலம் எங்கள் கோட்டை தான் 

ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால் திமுக கோட்டையாக கொங்கு மண்டலத்தை எடுத்துகிக் கொள்ள முடியாது எனவும், ஒரு தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும் அதிமுகவை குறைக்கூற முடியாது.அதிமுக மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்டுள்ள கட்சி என்பதில் மாற்று கருத்தில்லை எனவும் அண்ணாமலை தெரிவித்தார்

காக்கா உட்கார்ந்து பனம் பழம் விழுந்த கதையாக முதல்வர் சொல்லும் திராவிட மாடல் வெற்றி என்பது என்ன என விளக்க வேண்டும் எனவும், ஹாட் பாக்ஸ் கொலுசு கொடுத்து வெற்றி பெறுவது தான் திராவிட மாடலா? சிசிடிவி கேமராக்களை ஆப் செய்துவிட்டு ஓட்டு போடுவது தான் திராவிட மாடல் வெற்றியா? இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெறுவது தான் திராவிட மாடல் வெற்றியா?  என திமுக தலைவர் ஸ்டாலிடன் கேள்வி எழுப்பினார் அண்ணாமலை. 

தங்களுடைய வெற்றி எனபது மோடிஜி பார்முலா எனவும், பா.ஜ.க  தமிழகத்தின் உள்ளே வந்துவிட்டதாகவும் அவத் தெரிவித்தார்.20 வருடங்கள் கழித்து 4 எம்.எல்.ஏக்களை பெற்றோம். இப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கணிசமாக வாக்கு வாங்கியுள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை எம்.பிக்களை பா ஜ.க பெற போகின்றது என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்களோ இல்லையோ திமுக முடிவு செய்யும் என அண்ணாமலை தெரிவித்தார்

பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக 163 கோடி ஊழல் செய்துள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக பா.ஜ க அண்ணாமலை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் டெப்பாசிட் இழக்கும் என்றும், இந்தியாவில் எங்கும் காங்கிரஸிற்கு இடமில்லை என்ற நிலை தான் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் சுவாசத்தில் வாழ்ந்து விடலாம் என நினைப்பதாகவும் அவர் சாடினார்.அதிமுக – பா.ஜ.க கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது பா.ஜ.கவுக்கு சாதகமாக இருந்தாகவும், தமிழக பா.ஜ.கவில் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்க இந்த தேர்தல் உதவியுள்ளதாக பா.ஜ.க அண்ணாமலை தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை பா.ஜ.க வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலூரில் எப்படி ஹிஜாப் விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்தார்களோ அது போல தான் ஜெயக்குமார் மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும்.லுங்கியுடன் குண்டுகட்டாக கைது செய்ய என்ன தேவை உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக – பா.ஜ.க உறவு நல்ல நிலையில் உள்ளதாகவும். தமிழகத்தில் பா.ஜ.க வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.பா.ஜ.கவின் லட்சியத்தை அடைய இந்த வெற்றி ஒரு மைல்கள் எனவும். மக்களிடம் பா.ஜ.க மீது பரப்பியுள்ள பொய் கதைகளை மக்கள் இந்த தேர்தலில் சுக்குநூறாக உடைத்துள்ளார்கள்  எனவும் பா.ஜ.க அண்ணாமலை தெரிவித்தார்.

தனக்கு கவர்னர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவி ஆசையில்லை எனவும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவு செய்துவிட்டு தனது விருப்பமான தொழிலான விவசாயம் செய்ய இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Exit mobile version