ஒரு பக்கம் அண்ணாமலை… ஒரு பக்கம் ஆளுநர்… திராவிட மாடல் ஆட்சி அந்தரத்தில்…

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக ஆளுநர் ரவி இருவருமே மிகப்பெரிய அதிகாரிகளாக இருந்து ஒருவர் கட்சி தலைமை பொறுப்பிலும் ஒருவர் மாநிலத்தின் தலைமை பொறுப்பானஆளுநர் பதவியிலும் இருக்குகிறார்கள். ஒருவர் உளவுத்துறையில் முத்திரை பதித்தவர் ஒருவர் ரவுடிகளை அடக்கி சிங்கம் என பெயர் பெற்றவர் இவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் அதாவது தமிழகத்தில் இருப்பதுதான் ட்விஸ்ட்… இந்த இருவரால் தான் தற்போது ஆளும்கட்சியான திமுகவிற்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

அரசின் எதிர்ப்பிற்கு இடையில் ஆளுநர் ஒருவர் ஊட்டியில் தனியாக மாநாடு நடத்துவது இதுவே முதல்முறை. ஆளுநர்தான் பல்கலைக்கழக வேந்தர். இதனால் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தற்போது துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டி இருக்கிறார்.ஆளுநர் ரவி இது ஆளும் தரப்பை நோகடித்து விட்டது. தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளது அதற்கு துணை வேந்தர் பதவி நியமிக்கப்படுவதில் திமுகவிற்கு ஆளுநருக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நடந்தது. ஊட்டியில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி மட்டுமின்றி தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இது ஆளும் தரப்புக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு ஆளுநர்கள் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை பறித்து மசோதா நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் மசோதாவை திமுக நிறைவேற்றி உள்ளது.

துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேசிய சில விஷயங்கள் ஆளும் தரப்பிற்கு கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டியில் பேசிய ஆளுநர் ரவி, நாட்டை துண்டாட நினைப்பவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு கருணையே காட்ட கூடாது. அவர்களுக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லை என்று கடுமையாக பேசினார்.

இந்த நாடு ஒரே குடும்பம். இதில் வேறுபாடுகள் இருக்க கூடாது. காஷ்மீரில் பிரிவினை சக்திகள் ஒடுக்கப்பட்டுள்ளன.அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்., வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பிரச்சனையும் தீர்க்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு துரிதமாக செயல்பட்டு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது, என்று குறிப்பிட்டார்.

தனி நாடு தமிழ் ஈழம் திராவிட நாடு என பேசிவரும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுநர் ரவி. இது தான் திமுகவிற்கு பெரும் எரிச்சலை கிளப்பியுள்ளது. ஊட்டியில் நடைபெற்ற ஆளுநர் ரவி தலைமையிலான மாநாட்டில் துணைவேந்தர்கள் அல்லாத உளவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளார்கள் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

ஒருபக்கம் ஆளுநர் என்றால் மறுபக்கம் பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார். தி.மு.க அரசின் ஊழல்களை வெளிகொண்டுவருகிறார். திமுகவை தினமும் விமர்ச்சித்து வருகிறார். திருமாவளவனை நேரடியாக விவாதத்திற்கு அழைக்கிறார். திருமாவளவளவன் சப்பைக்கட்டு கட்டி விவாதத்திற்கு வராமல் தப்பித்து விடுகிறார். திடீரென கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்திக்கிறார். இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஷாக் கொடுக்கிறார். பம்பரமாய் சுற்றி கொண்டுள்ளார். லெப்ட் ஹேண்ட்டில் மீடியாவை வச்சு செய்யுறார் யாருய்யா இந்த மனுஷன் என திமுகவினரே பொறாமைபடும் அளவிற்கு அரசியல் செய்து வருகிறார். அண்ணாமலை.

மேலேயும் செந்தில் பாலாஜியை பாரபட்சம் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார் அண்ணாமலை. தமிழகத்தில் மின்வெட்டு நடக்கும். மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடைபெறும் என இரு மாதத்திற்கு முன்னேரே கூறினார். தமிழகத்தில் தற்போது மின்வெட்டால் இருளில் மூழ்கியுள்ளது. அண்ணாமலை சொன்னது நடக்கிறது திமுக ஊழல் செய்கிறது என மக்களும் பேச துவங்கிவிட்டார்கள். இது திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மீடியாவை மட்டும் நம்பி ஆட்சி செய்து வருகிறது திமுக ஆட்சி.

மேலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களும் அடுத்த நொடியே மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு சென்றுவிடுகிறது. இதன் காரணமாக தான் புதுச்சேரி செல்பவர் தமிழகம் வந்து சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றது. தமிழகத்தில் விரைவில் அரசியல் ரீதியாக பெரிய மாற்றம் இருக்கும் என டெல்லி வட்டரங்கள் தெரிவிக்கிறது.

ஒரு பக்கம் அண்ணாமலை… ஒரு பக்கம் ஆளுநர்… திராவிட மாடல் ஆட்சி அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது தெளிவாக தெரிகிறது,

Exit mobile version