சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில்,அவர் திமுக நிர்வாகி இல்லை என தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கூறிவரும் நிலையில் தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதிய ஆதாரம் ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு?
திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா? என குறிப்பிட்டுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















