பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்வி !

Annamalai

Annamalai

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பாரா? என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஆதாரங்களை வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா திரு.ஸ்டாலின் அவர்களே?

https://x.com/annamalai_k/status/1906313257952182668

இந்த ஊழலின் அளவைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள, ஒரு கிராமத்தை மட்டும் மேற்கோள் காட்டியிருக்கிறோம்.

2) தமிழகத்தை விட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

3) MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?

திரு.ஸ்டாலின் அவர்களே. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி.
தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு என குறிப்பிட்டுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version