அண்ணாமலை மீது கைவைப்பேன்னு நான் சொல்லவில்லை அடக்கி வாசித்த அமைச்சர் சேகர்பாபு ! சைலன்ட் உத்தரவு பிறப்பித்த தலைமை !

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார். ஆனால் இந்த முறை சம்பவம் வரப்போகும் ஊழலை சுட்டி காட்டியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை திமுகவினர் மின் வாரியத்தில் திருடப்போகும் முன்பே ஏம்ப்பா திருட கிளம்பி விட்டிர்களா என்று அவர்க ளை எச்சரிக்கை செய்து இருக்கிறார் அண்ணாமலை. அவர் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மின் வாரியதை பற்றி முக்கிய தகவலை பகிர்ந்தார்.

இது தமிழக அரசை குலுக்கியுள்ளது. வந்த 6 மாதத்தில் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டா என்று ஸ்டாலின் சற்று கவலை கொண்டுள்ளாராம். மின் வாரியத்தில் நடைபெறும் டெண்டர் விஷயத்தில் யார் அந்த அமைச்சர் மற்றும் அந்த அதிகாரிகள் என விசாரிக்க தொடங்கி உள்ளதாம் தமிழக தலைமை.

இப்போது தான் கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு போட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ளா மின்வாரிய குறித்த ஊழல் மேலும் திமுகவை நிலை குலைய செய்துள்ளது.கோவில் விவகாரம் முதல் அண்ணாமலையின் அதிரடி ஆக்சன் குறைந்தபாடில்லை. பாஜகவினர் சமூகவலைதளைங்கள் மூலமாக திமுகவை தோலுரித்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து சனிக்கிழமை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை சேகர்பாபு பாஜக மீது கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம் என கூறியுள்ளார் அதற்கு உங்கள் பதில் என்ன என சேகர்பாபுவிடம் நிருபர்கேட்டார்.

அதற்க்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு “அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் சொல்லவில்லை; பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லியிருக்கிறார், அன்பால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம், நிலைதடுமாறும் போது கை கொடுத்தும் காப்பாற்றலாம்.என அவர் தனது பேச்சில் பதுங்கி பதில் கூறியுள்ளது இப்போது திமுகவினரிடம் விழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அமைச்சர்களை அடக்கி வாசிக்க சைலன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாம் தமிழக அரசின் தலைமை என்று திமுக முக்கியப்புள்ளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version