உள்ளாட்சி தேர்தல் அதிரடியாக களம் இறங்கும் அண்ணாமலை! தமிழக பா.ஜ.க புது ரூட்!

தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக புதிய இளம் தலைவர் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி பதவி என தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது தேசிய பா.ஜ.க. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டி வருகிறார்கள் தமிழக பா.ஜ.க தலைவர்கள். அண்ணாமலை வானதி சீனிசவாசன் போன்ற தலைவர்கள் Attacking Mode ல் உள்ளார்கள். இது பாஜகவினரிடையே புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. சமூக வலைதங்களிலும் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை எதிகொள்ள அனைத்து கட்சியினரும் தயாராகி வருகிறார்கள். திமுக கூட்டணியுடன் தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 75 நாட்களில் நீட் தேர்வு ரத்து செய்யவில்லை ,மின்வெட்டு,ரவுடிசம், மணல் திருட்டு என மக்கள் மனதில் வெறுப்பு வந்து விட்டது தனித்து போட்டியிட்டால் திமுக வெற்றி பெறுவது சற்று கடினம் ஆகும். அதனால் தான் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க முதல்வரே விஜயகாந்த் வீட்டிற்கு சென்றார்.

ஆனால் அதிமுகவிற்கு அந்த நிர்பந்தம் இல்லை சட்டசபை தேர்தலில் பல கட்சிகளை கழட்டிவிட்டு தைரியமாக களத்தில் இறங்கியது. அதற்கு காரணம் எடப்பாடி அவர் மீது அவரே அளவுக்கு அதிகமான நம்பிக்கை தான். அதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தலும் அதிமுக வீழ்ந்துவிடவில்லை. திமுகவுடன் அனைத்து ஊடகங்கள் மற்றும் பல சிறிய போராட்ட குழுக்கள் பொய்யான வாக்குறுதிகள் சிறுபான்மையினரிடையே பொய்யான தகவல் ,எதற்கெடுத்தாலும் போராட்டம் என பல சூட்சமங்களை திமுக கையாண்டது ஆனலும் மிக பெரிய வெற்றியை திமுகவால் பெறமுடியவில்லை.

தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சிகள் தயாராகி வரும் நிலையில் பாஜக இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்சியின் தொண்டா்கள் வீடு வீடாகச் சென்று, வீட்டில் உள்ளவா்களின் புள்ளி விபரங்கள், பிரச்னைகள் பிரதமர் மோடியின் திட்டங்கள் பற்றி எடுத்து கூறுதல் அந்த திட்டத்தில் மக்களை இணைத்தல் போன்ற வேலைகளை செய்ய உத்தரவிட்டுள்ளது தமிழக பாஜக மேலும் மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து படிவத்தில் பூா்த்தி செய்து மாவட்ட நிா்வாகிகளிடம் வழங்க வேண்டும். என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்ததால் போட்டியிட்ட காரணத்தினால் தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது’ என முன்னள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். அதற்கு ‘பா.ஜ.க தோல்விக்கு அ.தி.மு.க. எடுத்த சில தறவான முடிவுகளே காரணம்’ என தமிழக பா.ஜ. தரப்பில் பதிலடி தரப்பட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டியிட்டு இரு மாநகராட்சி மேயர் 10 முதல் 30 வரை நகராட்சித் தலைவர்கள் 300 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து வேலை செய்ய இறங்கியுள்ளது. தனித்து போட்டியிடுவதால் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வாய்ப்பு பாஜக வினருக்கு கிடைக்கிறது. சொந்த செல்வாக்கு பெற்ற கட்சியினர் உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.கட்சியின் சின்னமான தாமரையை தமிழகம் முழுதும் பட்டி தொட்டி வரை விளம்பரப்படுத்தி கட்சியை கிராம அளவில் பலப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

அ.தி.மு.க.வும் தங்களது கட்சியினரை தக்க வைத்துக்கொள்ள தனியாக போட்டியிடுவது குறித்து பல கட்ட ஆலோசனைகளை நடத்திவருகிறது. பாமக உள்ளிட்ட கட்சிகளிடம் இது குறித்து பேச ஆரம்பித்துள்ளது அதிமுக.ப

Exit mobile version