என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

தற்போது தமிழகத்தில் பா.ஜ.க தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க அரசினை எதிர்த்தும் விமர்சித்தும் தினம் தோறும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. மேலும் திமுக ஆட்சியில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட தவறுவதில்லை. அதிமுக அமைதி காக்கிறது இதுதான் நேரம் என அடித்து ஆடுகிறார் அண்ணாமலை . முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் பா.ஜ.க எடுத்த நிலை திமுகவை நிலைகுலைய வைத்தது.

மேலும் 19 ஆம் தேதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்க கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்! ,22 ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கூறி ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்கள் என அறிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஊடங்கங்கள் ஆதரவு இல்லாமல் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றுவருகிறது பா.ஜ.க மறுக்க முடியாத ஒன்று. வெள்ள நிவாரண பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபட்டு வருகிறது இது போன்ற செயல்பாடுகளால் திமுக மட்டுமல்ல அதிமுகவும் சற்று ஆட்டம் கண்டுள்ளது.

இந்நிலையில் கன்யாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை எதிர்க்கட்சியாக இருக்கும் போது நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோரிய ஸ்டாலின் இப்போது 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளித்திருப்பதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

மழை, வெள்ளம் சென்னையை மட்டும் தான் ஊடகங்கள் பெரிதாக காட்டி வந்தன. ஆனால் சென்னையை விட அதிக பாதிப்பில் தென் மாவட்டங்கள் இருக்கிறது என்ற விவரம் படிப்படியாக வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.அதுவும் கன்னியாகுமரியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடரும் மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் மக்களின் இயல்பு வாழ்க்கை இப்போது தலைநகர் சென்னையில் இருந்து தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்கு திரும்பி இருக்கிறது.

இந நிலையில் வெள்ள பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.ஆனால் இந்த அறிவிப்பு போதாது என்றும், எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் அப்போது அரியணையில் இருக்கும் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து உள்ளன.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் பேசிய சில விஷயங்களை நினைவூட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் காலத்தில் ஏக்கருக்கு 30000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இப்போது அவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் அறிவித்து இருக்கும் 20000 ரூபாய் நிவாரணத்தை விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். என விமர்சித்துள்ளார்.

எனவே எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போது நிவர் புயல் சமயத்தில் அவர் கோரிய 30000 ஆயிரம் ரூபாயை ஒரு ஏக்கருக்கு நிவாரணமாக தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று போட்டு தாக்கி இருக்கிறார் அண்ணாமலை.

Exit mobile version