விடை தருவாரா விடியல்‌ தலைவர்‌? திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை!

Oredesam BJP-Annamalai

Oredesam BJP-Annamalai

கடந்த செப்டம்பர்‌ 17ஆம்‌ தேதி, மத்திய நிதி அமைச்சர்‌ திருமதி நிர்மலா சீதாராமன்‌ தலைமையில்‌ லக்னோவில்‌ நடைபெற்ற 45வது ஜிஎஸ்டி கூட்டத்தில்‌ தமிழகத்தின்‌ சார்பில்‌ பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள்‌ இருந்தும்‌, தமிழக அரசின்‌ சார்பில்‌ நிதி அமைச்சர்‌, 1 கவுன்சில்‌ கூட்டத்தில்‌ பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம்‌ அளிக்கும்‌ செய்தி.

கொரோனா நோய்‌ தொற்றால்‌இணைய வழியில்‌ நடைபெற்ற 81 கவுன்சில்‌ கூட்டம்‌, சுமார்‌ 2௦ மாதங்களுக்குப்‌ பின்பு நேருக்கு நேர்‌ அதிகாரிகள்‌ சந்திப்பில்‌ நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில்‌ சாமானிய மக்கள்‌ முதல்‌ நிறுவனங்கள்‌ வரையில்‌ அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள்‌ பல வெளியாகியுள்ளது.

இதில் தமிழகத்தின்‌ பிரச்சனைகளை எடுத்துரைக்க எவரும்‌ இல்லை என்பது மக்களை மதிக்காத எதேச்சதிகாரம்‌ என்பது பாஜகவின்‌ கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின்‌ நிலைப்பாடும்‌ அதுவே.

தமிழக நிதி அமைச்சர்‌ பத்திரிக்கையாளர்‌ சந்திப்பில்‌ பேசும்‌ போது, தான்‌ கலந்து கொள்ள இயலாத காரணத்தைச்‌ சொன்ன போது தமிழகமே அதிர்ச்சியில்‌ தலைகுனிந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்ள வேண்டி இருப்பதால்தான்‌ செல்லவில்லை என்று கூறுபவரா, நம்‌ தமிழ்நாட்டுக்கு நிதி அமைச்சர்‌?
இதிலிருந்து தங்கள்‌ அரசு எதற்கு முக்கியத்துவம்‌ தருகிறது என்று தெளிவாகிறது.

செப்டம்பர்‌ 2 ஆம்‌ தேதியே லக்னோவில்‌ நடைபெறும்‌ லே கவுன்சில்‌ கூட்டத்தின்‌ அறிவிப்பு செய்தித்‌தாள்களில்‌ வந்துவிட்டது, ஆனால்‌ போதிய அவகாசம்‌ இல்லை என்கிறார்‌ நிதி அமைச்சர்‌ திரு. தியாகராஜன்‌. லக்னோவுக்கு நேரடி விமானம்‌ இல்லைஎன்கிறார்‌,

பின்னர்‌ தந்த விளக்கத்தில்‌ சிறிய ரக விமானங்களில்‌ நான்‌ செல்ல மாட்டேன்‌ என்கிறார்‌. பயணிக்க ஒன்றரை நாட்களாகும்‌ மூன்று விமானங்கள்‌ மாற வேண்டும்‌ என்று தன்‌ கூற்றுக்கு தன்னிலை விளக்கம்‌ வேறு தருகிறார்‌. வெறும்‌ மூன்று மணி நேரப்‌ பயணத்தில்‌ நேரடி விமானம்‌ இருந்தும்‌, தவறான
தகவல்களை, அவர்‌ சட்டமன்றத்தில்‌ சொல்வது போலச்‌ சொல்கிறார்‌.

பெட்ரோல், டீசல் விலை உயரும் போது சாமானியர்கள் பாதிக்கின்றனர். எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜி.எஸ்.டி., வரியில், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எந்த வஞ்சகமும் செய்யவில்லை.

பெட்ரோல், டீசல் விற்பனையை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது. இதுவே, எங்கள் விருப்பம். இதனால், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இழப்பு ஏற்படும். தமிழக அரசு, பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு, தமிழக நிதி அமைச்சர் செல்லாமல், அவர் அளிக்கும் பதில் வியப்பாக உள்ளது.எதிர்க்கட்சியாக இருந்த போது, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் வர வேண்டும் என்று கூறிய தி.மு.க., தற்போது, ஆளுங்கட்சியாக வந்ததும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தியாகராஜனின் பேச்சும், அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்களும்
கண்டிக்கத்தக்கவை.தி.மு.க., தவிர, மற்ற அனைத்து கட்சியினரையும், அவர் கடுமையாக விமர்ச்சிகிறார்
இதுகுறித்து விடியல் தலைவர் விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என அண்ணாமலை கூறினார்.

Exit mobile version