தமிழக அரசியலில் புதிய வரலாற்றை எழுதிய அண்ணாமலை! திசை திருப்ப இந்த சோமோட்டவை கையில் எடுத்த RSB ஊடகங்கள்

பத்திரிகை சந்திப்பில் அண்ணாமலை கிளப்பிய விவகாரம் சாதாரணமானது அல்ல‌! தமிழ்நாட்டின் மின் சக்தி வழங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினை ஆளும்கட்சியினர் வளைத்து போட்டு அந்த நிறுவனத்திற்கு 5000 கோடி முதல் 10,000 கோடி வரை ஒப்பந்தம் போடுவதற்கு மின்சார வாரியத்தில் ஏதோ செய்ய திட்டமிடுவதை பகிரங்கமாக தெரிவித்தார் அண்ணாமலை

அத்தோடு இந்த ஒப்பந்தம் கைவிடபடாவிட்டால் சம்பந்தபட்ட அனைத்து ஆவணங்களும் வெளியிடபடும் என அவர் தெரிவித்ததெல்லாம் தமிழகத்தை அதிர வைத்திருக்கின்றன‌. இதற்கு முன் இருந்த அரசியல் கட்சிகள் ஊழல் செய்தால் அதை செய்யவிட்டு பின் ஊழல் நடந்துவிட்டது. என தேர்தல் பிரச்சாரத்தில் கூறி
ஓட்டுக்கேட்பது வழக்கம்.

முன்னாள் இருந்த தமிழக கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்கு அன்றி அரசை சாடியதே இல்லை என்பது குறிப்பிடதக்கது. இங்கு ஊழல் பெருகவும் இன்னும் எத்தனையோ அலங்கோலங்களும் நடக்க ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இருந்த ஒருவித புரிந்துணர்வே காரணம்

அது இப்பொழுது அண்ணாமலை வரலாற்றை மாற்றி எழுதிவருகிறார் . பழைய அரசியலை தனது அதிரடி அரசியல் மூலம் தகர்க்கிறார், பா.ஜ.க சரியான எதிர்கட்சியாக வளர ஆரம்பித்துள்ளது. அதிமுக சசிகலா எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் இடையில் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என கடும் சிக்கலில் சிக்கி சரியும் நிலையில் உள்ளது.கம்யூனிஸ்டுகள் காலாவதியாகிவிட்ட நிலையில் தமிழக அரசியல் களம் பா.ஜ.கவுக்கும் திமுகவுக்கும் நேரடி மோதல் களமாக மாறிவிட்டது

திமுகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் எதிர்கட்சி தலைவராக அண்ணாமலை உருவெடுத்துள்ளார் எனது நிதர்சனமான உண்மை. அண்ணாமலை கூறிய ஊழல் பற்றி ஊடகங்களில் ஒரு வார்த்தை வெளியிடவில்லை. ஆனால் அவர் கூறிய திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு திமுக தலைமையை உலுக்கியுள்ளது.

அண்ணாமலை அவர்கள் திமுக மின்சார துறையில் திருட போட்ட மெகா பிளான் மீடியாவில் போட்டுடைத்தார் . அது மக்களிடம் போய் சேராமல் இருக்க திசை திருப்பவே இந்த Zomato matter….கையில் எடுத்து நேற்று விளம்பரத்தை தேடி கொண்டார்கள் RSB ஊடகங்கள்.

தமிழக அரசியலுக்கு புதிய வரலாற்றை எழுதுகிறார் அண்ணாமலை அவர்கள். மக்கள் பணம் வீணாகக்கூடாது என ஊழல் செய்வதற்கு முன் அந்த ஊழலை தடுத்து நிறுத்துவது புதிய நிகழ்வுதான். மிகப்பெரிய குற்றசாட்டு எழுந்த பின்னும் திமுக தரப்பில் மௌனம் சாதிக்கிறது என்றால் விஷயம் உண்மைதான் போல். ஒரு நாயகன் உருவாகிறான். தமிழகத்தை ஆளப்போகிறான். !

அவர்களுக்கு திமுக ஒரு விடிவெள்ளி கிடைத்திருப்பது நல்ல விஷயம், தொடர்ந்து அண்ணாமலை இம்மாதிரி விஷயங்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டுவர வாழ்த்துக்கள்.

Exit mobile version