செயற்கை நுண்ணறிவு முதல் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மேம்பாடு வரை இந்திய சந்தையில் புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ஊக்குவிக்க அமெரிக்க நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவித்து வருகின்றன.
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் கவனம் செலுத்துவது முதல் மக்களுடன் இணைந்து நடத்தை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது வரை இந்திய அரசின் அணுகுமுறையில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருப்பதாக மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கியின் தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கான மூத்த வல்லுனர் திரு சேவியர் ஷோவே த ப்யோஷன் தெரிவித்துள்ளார்.
தூய கங்கைக்கான தேசிய இயக்கம் மற்றும் கங்கை ஆற்றுப் படுகை மேம்பாடு மற்றும் ஆய்வு மையம் ஆகியவை இணைந்து ஐந்தாவது இந்திய தண்ணீர் தாக்கம் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்திய டிஜிட்டல் தண்ணீர் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைக் கண்டு தமது வங்கி பெருமை கொள்வதாகவும், பிரச்சனையைப் புரிந்து கொண்டு அதனைத் தீர்க்க வேண்டும் என்றும், இந்த வழியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் தண்ணீர் சம்பந்தமான துறையில் டிஜிட்டல் அடித்தளத்தை உருவாக்க அமெரிக்கா சிறந்த நேச நாடாக அமையும் என்று வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பொருளாதார அமைச்சராக செயல்படும் டாக்டர் ரவி கோட்டா தெரிவித்தார்.