ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் SFI தலைவன் ஶ்ரீகாந்த் கைது!

ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் விஸ்டிரான் தொழிற்சாலையில் கலவரம் செய்த விவகாரத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (Students’ Federation of India – SFI) தலைவன் (President) ஶ்ரீகாந்த் கைது!

குறிப்பு: SFIஐ ஆரம்பித்தவர் இந்து விரோதி தி ஹிண்டு ராம். SFI தன்னை ஒரு மாணவர் அமைப்பாக கூறிக்கொண்டாலும் அது மார்க்ஸீஸ்ட் கம்யூனிஸ்ட்டின் பிரிவாக செயல்படுகிறது.

சீனாவிலிருந்து வெளியேறிய பல சர்வதேச நிறுவனங்கள் ஆசியாவின் பிற நாடுகளில் – குறிப்பாக இந்தியாவில் – தொழிற்சாலையை அமைத்து வருகின்றன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதிரி சீனாவிலிருந்து இந்தியா வரும் நிறுவனங்களுக்கு பல சலுகைகளும் அறிவித்துள்ளார்.

சாம்சங் முழுமையாக சீனாவிலிருந்து வெளியேறி இந்தியாவில் பெரிய உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நில அபகரிப்பு பசியில் இருக்கும் சீனா, தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கூறி வருகிறது. அந்த தைவானை சேர்ந்த ஆப்பிள் நிறுவன ஐஃபோன் தயாரிக்கும் விஸ்டிரான் இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ளதும், மேலும் பல தைவான் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதும் சீனாவை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

‘சீனாவிலிருந்து கம்பெனிகளை இந்தியா திருடினால் கடும் விளைவுகளை சந்திக்கும்’ என கம்யூனிச சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிக்கை (?) அவ்வப்போது இந்தியாவை எச்சரித்து வந்தது. விஸ்டிரான் தொழிற்சாலை கலவரம் அதை நிரூபிப்பதாக உள்ளது.

விஸ்டிரான் பற்றி ஊடகங்களும் தெளிவான விவரங்களை தெரிவிப்பதாக தெரியவில்லை. ‘பேசிய சம்பளம் தரவில்லை. மேலும் மாதக்கணக்கில் சம்பளம் தராததால் கலவரம்’ என்று தென்னக பர்க்கா தன்யா ராஜேந்திரனின் நியூஸ்மினிட் (fakenews) உள்ளிட்டவை கூறினாலும், அவற்றிற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. 4 நாட்கள் தாமதமானதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா கூறுகிறது.

மாதக்கணக்கில் சம்பளம் தராத எத்தனையோ நிறுவனங்கள் உண்டு. ஆனால், அவற்றில் எல்லாம் இம்மாதிரி கலவரம் நடப்பது அரிது.

இந்த கலவரத்தால் சொத்து சேதம் 400+ கோடி என்றன ஊடகங்கள். இப்போது 40 கோடி என்கின்றன.

கம்யூனிச சீனாவின் இந்திய அடிமைகள் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்கிறார்கள்.

Karnataka: Police have detained Srikanth, taluk president of Students’ Federation of India in Kolar On Dec 12, violence erupted at Wistron Pvt Ltd, in Kolar. FIR was registered against 7,000 unknown people incl 5,000 contract workers in connection with violence & vandalism.
https://twitter.com/ANI/status/1339405813937393664

Wistron iPhone factory violence: Police arrest Kolar’s SFI taluk President
https://www.thenewsminute.com/article/wistron-iphone-factory-violence-police-arrest-kolar-s-sfi-taluk-president-139754

Another twist in Wistron violence? Company now reduces extent of damages from Rs 437 cr to 43 cr
https://www.indiatoday.in/india/story/another-twist-in-wistron-violence-company-now-reduces-extent-of-damages-from-rs-437-cr-to-43-cr-1750235-2020-12-16
.

Exit mobile version