அரபிக்கடலும் அலை அடங்கிய காவி அலை

இன்று தெற்கு மும்பையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மகாராஸ்டிரா நவநிர்மான் சேனாவின் தொண்டர்கள் முழங்கிய கோஷங்களை கண்டு அலறிய அரபிக் கடலும் தன்னுடைய அலைகளை அடக்கி கொண்டு அமைதியாக இருந்ததைப்பார்க்கும் பொழுது மகாராஸ்டிரா வில் ஒலித்து வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

சத்ரியன் படத்தில் திலகர் ரவுடி போலீஸ் பதவியை துறந்து அமைதியாக இருக்கும் விஜயகாந்திடம் இந்த பன்னீர்செல்வம் வேண்டாம் பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும்
என்பார்.

இதைத்தான் இப்பொழுது ராஜ் தாக்கரேவுக்கு பிஜேபி கூறி இருக்கிறது.இதனால்
ராஜ்தாக்கரேவும் 1990 களில் மும்பையை ஆட்டி வைத்த பால் தாக்கரேயின் உண்மையான வாரிசாக மாறிக்கொண்டு வருகிறார்.

மகாராட்டிர நவநிர்மான் சேனா கட்சி கொடியில் இருந்த சோசியல் அடையாளங்களை தூக்கி வீசி விட்டு முழு அளவில் காவி நிறம் பூண்டு சிவாஜி மகாராஜாவின் அரசு முத்தி ரையை காவி நிறத்தில் பதிய வைத்து புதிய அரசியல் இயக்கமாக பவனி வந்ததைக் கா ணும் பொழுது இங்கிருந்தே கரவொலி
எழுப்ப தோன்றுகிறது.

ஒரு அரசியல் தோற்று விட்டால் மறு அரசியலை வைத்து எதிரிகளை வெல்ல முடியும் என்று சிந்தித்து செயல்படும் இயக்கமே நீ ண்ட காலமாக வெற்றியை அளிக்க முடியும்
என்பதற்கு ராஜ்தாக்கரே மூலமாக மகாராட்டிராவில் பிஜேபி எடுத்து செல்லும் அரசியலையே உதாரணமாக கூறலாம்.

நீண்ட கால நண்பனாக இருந்து இப்பொழுது எதிரியாக மாறி ஆட்சியில் இருக்கும் சிவசேனாவை அரசியல் களத்தில் இருந்தே அப்புறபடுத்த சிவசேனாவின் எதிரியான மகாராஸ்டிர நவநிர்மான் சேனா மூலமாக பிஜேபி நடத்தும் அரசியல் அற்புதமாக இருக்கிறது

காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியில் இருக்கும் சிவசேனாவுக்கு தற்காலிக பயன்கள் கிடைத்தாலும் அதனுடைய அரசியல் கிரவுண்டை இழந்து வருகிறது.

மராட்டிய மண் உணர்வுடன் காவிக்கொடி ஏந்தி சிவசேனா நடத்திய 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் முடிவுக்கு வருகிறது.

சிவசேனாவினால் பிஜேபி இன்றி தனித்து பெரிய அளவில் சாதிக்க முடியாது.அது மட்டும ல்லா து காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தும் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதனை உணர்ந்து தான் உத்தவ்தாக்கரே கடந்த சில நாட்களுக்கு முன் பிஜேபியுடன் இனி இணையமாட்டோம் என்று ஒரு பொழுதும் கூறவில்லை என்று இறங்கி நிற்கிறார்.


ஆனால் பிஜேபியோ உத்தவ்தாக்கரேயின் எதிரியான ராஜ்தாக்கரேயுடன் கைகோர்த்து சிவசேனாவின் அடித்தளத்தை அசைக்க ஆரம்பித்து விட்டது.

மகாராட்டிர நவநிர்மான் சேனாவின் புதியகட்சி கொடியும் வேகமும் நிறைய சிவசேனா தரைவர்களையும் தொண்டர்களையும் ராஜ்தாக்கரேவை நோக்கி மீண்டும் வர வைத்து கொண்டு இருக்கிறது.

ராஜ்தாக்கரே பால்தாக்கரேவுக்கு பிறகு சிவசீனாவின் தலைவராக வர வேண்டியவர் தொ ண்டர்களும் அதைத் தான் விரும்பினார்கள்.


இருந்தாலும் அப்போதைய பிஜேபி தலைவர்கள் உத்தவ் தாக்கரேயுடன் உறவாடி நின்றதால் ராஜ்தாக்கரே அரசியல் களத்தில் ஓரங்கட்டப்பட்டார்.

பிஜேபி அப்பொழுது செய்த தவறுக்கு பிராயசித்தமாக ராஜ்தாக்கரேவை மகாராஸ்டிரா அரசியலில் மறுபடியும் வளர்த்து வருகிறது.

ராஜ்தாக்கரேவை மராட்டிய மண் சார்ந்த இந்துத்வா அரசியலை மீண்டும் எடுக்க வைத்துள்ளது பிஜேபி.

இனி விரைவில் சிவசேனாவின் அரசியல் முடிவுக்கு வருகிறது. இது தாங்க அரசியல்.


சிவசேனாஎதிரியாக மாறிய பிறகு முடங்கிவிடாமல் சிவசேனாவின் எதிரியான ராஜ்தாக்கரேயுடன் கை கோர்த்து சிவசேனா வை
யே அழிக்க இருக்கிறது பிஜேபி.

விரைவில் சிவசேனாவில் இருந்து பிஜேபி மூலமாக எம்எல்ஏக்கள் எம்பிக்கள் மகாராஸ்டிரா நவநிர்மான்சேனாவில் இணைய இருக்கிறார்கள்.

இதனால் அரசியல்ரீதியாக மகாராஸ்டிரா நவநிர்மான் சேனாவை பலம டைய வைத்து அதனுடன் இணைந்து மகாரா ஸ்டிரா ஆட்சியில் பிஜேபி அமரும்.

ஏம்ப்பா தலையைசுற்றி மூக்கை தொடுவதற்கு பதில் நேராகவேமூக்கை தொடலாமே..

அதாவது சிவசேனாஎம்எல்ஏக்களை நேரடியாகவே பிஜேபிக்குகொண்டு வரலாமே எதற்கு இப்படி மகாராஸ்டிரா நவநிர்மான்சேனாவில் இணையவைத்து பிறகு ஆதரவு எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்.

இது தாங்க சூப்பர் அரசியல்.ஏனென்றால்
சிவசேனாவின் எம்எல்ஏ எம்பிக்கள் பிஜேபிக்கு வந்தால் அது சிவசேனாவை அடிமட்ட அளவில் பாதிக்காது.

ஆனால் எம்எல்ஏ எம்பிக்கள் மகாராஸ்டிரா நவநிர்மான் சேனாவுக்கு
சென்றால் சிவசேனா வின் தொண்டர்களும்
அங்கே சென்று விடுவார்கள்.காரணம் எல்லா ரும் ஒரே ரத்தம் என்பதால் இடபெயர்ச்சி சுலபமாகி சிவசேனா வின் அடித்தளம் காணா
மல் போய்விடும்.

இன்றைய மகாராஸ்டிரா நவநிர்மான் சேனா வின் முழக்கங்களை கேட்டு அரபிக் கடலும் அலை அடங்கி அமைதியாக இருந்தபொழுது
உத்தவ் தாக்கரேயால் எழுப்பப்படும் குடியுரி மை திருத்த சட்ட எதிர்ப்பு கோஷம் அடங்க முடியாதா? முடியும் என்பதை விரைவில் எதிர்பாருங்கள்..

Exit mobile version