தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நடித்த, அரபி கன்னடப் படம், விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் முன்னோட்டம், இன்று வெளியாகிறது.சர்வதேச புகழ்பெற்ற, ‘பாரா’ நீச்சல் வீரர் கே.எஸ்.விஸ்வாஸ், 29, பயிற்சி பெற்ற நடனக் கலைஞராகவும் உள்ளார்.
இவர் 10 வயதில், மின் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தார். இதில், அவரது தந்தை உயிரிழந்தார். கடந்த, 2009ல் தாயையும் இழந்த விஸ்வாஸ், நீண்ட கால பயிற்சி மற்றும் நம்பிக்கையால், தொழில் முறை நீச்சல் வீரராக மாறினார். இந்தியாவுக்காக, பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.கன்னட இயக்குனர் ராஜ்குமார், விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை படமாக, அரபி என்ற பெயரில் படமாக்கி உள்ளார்.
இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக, அவர் 1 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். படத்தின் கதையை கேட்டதுமே, நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர், அண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















