அரசு அதிகாரிகளே இப்படியா? கஞ்சா விற்பனையில் ஈடுப்பட VAO கூட்டாளியுடன் கைது

kanja

kanja

தமிழகம் முழுவதும் கஞ்சா சர்வ சாதரணமாக கிடைக்கிறது.கஞ்சா போதையால் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு அதிகாரியே கஞ்சா விற்ற சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. புதுக்கோட்டை அருகே காரில் கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அபபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டைமாவட்டத்தில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையைதடுக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ஆங்காங்கேரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டையை அடுத்தகேப்பரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோதுஒரு காரை தனிப்படையினர் மடக்கிசோதனையிட்டனர். அதில் எடுத்துச்செல்லப்படுவது கஞ்சா என தெரியவந்தது. மேலும் காரில் இருந்த 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், ஒருவர் பெயர் ஜெய ரவிவர்மா (34). இவர் கோவிலூர் பகுதிகிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் ஆட்டாங்குடியை சேர்ந்த கணேசன் (43) என்பதும், இவர் முன்னாள் ஊர்க்காவல் படைவீரர் எனவும்தெரிந்தது. மற்றொருவர் காரைக்குடியை சேர்ந்த சூர்யா (31) எனவும் தெரியவந்தது. இவர்கள் காரில் விற்பனைக்காக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயரவிவர்மாவிடம் சின்ன வயதில் அரசில் கவுரவமான சம்பளத்துடன், விஏஓவாக வேலை கிடைத்துள்ளது. அதை ஒழுங்காக பயன்படுத்திக்கொள்ளாமல், இப்படி குறுக்கு வழியில் பணக்காரனாவதற்காக முயற்சி செய்யலாமா என்று போலீசார் அவரை வசைபாடினர்

இதையடுத்து போலீசார் ஜெயரவிவர்மா, கணேசன், சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 700 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர் பாக போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். கைதான 3 பேரையும் நேற்று சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

Exit mobile version