காபூலை தாலிபான் கைபற்றியது. மக்கள் மரண பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இஸ்லாமிய நாடான அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழ முடியவில்லை!
ஆப்கான் நாட்டில் இருந்து சாதாரண மக்கள் கால் நடையாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் காட்சிகள் ஒரு பக்கம். 12 வயது சிறுமிகளை கதற கதற தலிபான் தூக்கி செல்லும் காட்சிகள் மறு புறம்.
சற்று வசதி படைத்த மக்கள் காபூல் விமான நிலையத்தில் தப்பி செல்ல துடிக்கும் காட்சிகள். அங்கேயும் துப்பாக்கி சூடு, சாவு என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனத்தில் தொகுப்பாளராக பணிபுரிந்த ஷப்னம் தவ்ரான் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளார். வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவரை பெண் என்பதால் வீட்டுக்குச் செல்லுமாறு தாலிபான்கள் கூறியதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் வீடியோ வெளியிட்டு, உதவி கோரியுள்ளார்.
பெண்கள் படிப்பதற்கும் வேலைக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தாலிபான்கள் கூறியிருந்ததை கண்டு சந்தோஷப்பட்டதாகவும், தற்போது யதார்த்தத்தை உணர்ந்து வேதனை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமையை அவர்கள் மதிக்கவில்லை.
மற்றொரு பெண் பத்திரிகையாளர் கதிஜா அளித்தபேட்டியில் “ நான் பணிக்குச் செல்வதையும் தலிபான்கள் தடை செய்துள்ளனர். நான் வழக்கம் போல் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால், வாயிலில் இருந்த தலிபான்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.
பெண் குழந்தைக்கு எட்டு வயது ஆகிவிட்டால் அவளது நெருங்கிய ரத்த உறவு தவிர வேறு எந்தவோர் ஆணுடனும் நேரடித் தொடர்பில் அக்குழந்தை இருக்கக்கூடாது.
பெண்கள் புர்கா அணியாமல் வெளியே வரக்கூடாது. அதேபோல ரத்த உறவு கொண்ட ஆண்களின் துணையுடன்தான் அவர்கள் தெருக்களில் நடக்கவேண்டும்.
பெண்கள் ஹை-ஹீல்ஸ் அணியக் கூடாது. காரணம், நடக்கும்போது ஹைஹீல்ஸிலிருந்து வரும் சத்தம் ஆணின் கவனத்தை சிதறடித்து விடும்.
பொதுவிடங்களில் பெண்கள் சத்தமாகப் பேச அனுமதி இல்லை. அந்நியர்கள் பெண்களின் குரலைக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்கின்றனர் தாலிபன்கள்.
தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டின் சன்னல்களை திரைச்சீலை கொண்டு மூடவேண்டும். வெளியிலிருந்து பார்த்தால் உள்ளுக்குள் நடமாடும் பெண்ணின் உருவம் தெரியாமல் இருக்கவேண்டும்.
தாங்கள் போட்ட சட்டத்தை மீறி ஒரு பெண் நெயில் பாலிஷ் வைத்துக்கொண்டாள் என்பதற்காக 1996-ம் ஆண்டு அவளது கட்டை விரலை துண்டித்தனர் தாலிபன்கள்.
இனி என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!