பங்களாதேஷ் 1947 வரை இந்தியாவின் அங்கமாக இருந்த பகுதி. அதன் பின்பு 1971 க்கு பின்பு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்தது
வங்கதேசத்தில் துர்கா பூஜை நாள் முதல் இன்று வரை இந்து மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்று வருகிறது.இதில் பல இந்துக்கள் உயிர் இழந்துள்ளார்கள். மேலும் அவர்களின் உடமைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளது. இதனால்இந்துக்கள் வங்கதேசத்தில் வாழ்வது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் பலஸ்தீன்,சிரியா,என அங்கு வாழும் மக்களுக்கு இங்கிருந்து ஆதரவு கொடுக்கும் அமைப்புகள் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றதுக்கு ஒரு அமைப்பும் கண்டன குரல் எழுப்பவில்லை .
சிரியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டால் காப்பாற்றுங்கள் என இங்கு போஸ்டர் ஓட்டுவார்கள். அவர்கள் நாட்டில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டால் வாய் மூடி மௌனம் சாதிப்பார்கள்.
இந்த நிலையில் இது குறித்து நாட்டில் புதியதமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படு்ம் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 27 ம் தேதி ஒருமித்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறியுள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது ; இந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கும் வங்கதேசம் உட்பட பல நாடுகளில் இந்துகளின் வழிபாட்டு தலங்கள் மீதும் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது.
குறிப்பாக பங்களாதேஷ் நாட்டில் இந்து மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாக தெரிவித்த அவர், பங்களாதேஷ் 1947 வரை இந்தியாவின் அங்கமாக இருந்த பகுதி எனவும், அதன் பின்பு 1971 க்கு பின்பு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்தது என தெரிவித்தார்.
பங்களாதேஷ் நாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதும் இடம் பெயர்வதும் தொடர்கின்றது எனவும், 28 சதவீதமாக இருந்த இந்துகளின் எண்ணிக்கை தற்போது 8 சதவீதமாக குறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
அங்கு இந்துகளின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் கவலை அளிக்க கூடியதும் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி புதியதமிழகம் கட்சி ஒருமித்த கருத்துடைய அனைத்து இயக்கங்களையும் ஓன்று சேர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
டாக்டர். கிருஷ்ணசாமி, பங்களாதேஷ் விவகாரம் முக்கியமானது எனவும் மனித உரிமை தொடர்பானது என கூறிய அவர், இந்த விவகாரத்திற்கு வடமாநில ஊடங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக ஊடகங்கள் கொடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.