ருதரத்தாண்டவம் படத்திற்கு தடை …

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்.

மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் 3 வைத்து படம் ருத்ரதாண்டவம்.

சில வருடங்களுக்கு முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நாடக காதலை தோலுரித்து காட்டினார். இயக்குனர் மோகன் அவர்கள்.

திரெளபதி திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் படம் வெற்றி அடைந்தது வணிகரீதியாகவும் இப்படம் வெற்றியைப் பெற்றது.

திரெளபதி திரைபடத்தில் நாடக காதல் பற்றி தோலுரித்த மோகன் அடுத்த படமாக . தற்போது ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எந்த விதமான சமூக பிரச்சனையை கையில் எடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பை கிளப்பியது.

ருத்ரதாண்டவம் படத்தின் ட்ரைலர் 2021, ஆகஸ்ட் 24 வெளியானது! இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. நடிகர்கள் ரிஷி ரிச்சர்ட், ராதாரவி, தம்பி ராமையா மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ட்ரெய்லரில் போதை பொருட்களின் பழக்கத்தால் இளம் பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் சிறுவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அதனை காவல்துறை அதிகாரியாக உள்ள ரிச்சட் அதனை தடுப்பதுபோல் உள்ளது.

பிசிஆர் சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தொடர்பாக இந்தக் கதைக்களம் முழுவதும் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மதமாற்றம் குறித்தும், இந்து மதத்தை இழிவு செய்கிறார்கள் என்பது போன்ற அதிரடி வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் ருத்ர தாண்டவம் படத்தை தடை செய்ய கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வந்த சிறுபான்மை மக்கள் நலக் கட்சியினர் புகார்  மனு ஒன்றை அளித்தனர்.

அதில் கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ருத்ர தாண்டவம் படத்தில் இயக்குநர் மோகன்ஜி பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்வதோடு இயக்குநர் மோகன்ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version