ஜனவரியில் 15 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் !

இன்று தொடங்கிய புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரியில் வங்கிகள் 15 நாட்கள் மட்டுமே செயல்படும். இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு, பிராந்திய விடுமுறை உட்பட விடுமுறை தினங்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதிகபட்சமாக மொத்தம் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 19 நாள்கள் வங்கிகள் செயல்படும்.

2022 ஜனவரி மாதத்தின் வங்கிகளின் விடுமுறை பட்டியல் இது…  

நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் வழக்கம் போல் இயங்காது.

வாராந்திர விடுமுறையைத் தவிர, வேறு பல விடுமுறைகள் காரணமாக ஜனவரி மாதத்தில் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் செயல்படும்.

நாளைத் தொடங்கும் புத்தாண்டின் முதல் மாதத்தில் வங்கிகளின் விடுமுறையை தெரிந்துக் கொண்டால், திட்டமிடுவதற்கு சுலபமாக இருக்கும்.  https://youtu.be/jI2vZp_pQe4

ஜனவரி 2 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 4: லோசூங் (சிக்கிம் மாநிலம்)

ஜனவரி 8: இரண்டாவது சனிக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 9 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 11: மிஷனரி தினம் (மிசோரம்)

ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் (கொல்கத்தா)

ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல் (பல மாநிலங்களில் விடுமுறை)

ஜனவரி 15: மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் (புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு)

ஜனவரி 16 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 18: தைப்பூசம் (சென்னை)

ஜனவரி 22: நான்காவது சனிக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 23 : ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 26: குடியரசு தினம்; நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

ஜனவரி 30 : ஞாயிற்றுக்கிழமை; அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ல ஜனவரி 2022 விடுமுறைப் பட்டியலில்,பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 9 விடுமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிறு கூட்டினால் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 16 ஆகிவிடும். தமிழகத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் செயல்படாது.

Exit mobile version