இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருங்கள்- பாஜக தலைவர் அண்ணாமலை.

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து பாஜகவின் நிலைபாட்டை தெரிந்துகொள்ள சற்று பொறுமையாக இருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் மறைந்த எம்எல்ஏ. ஈவெரா திருமகனின் அப்பா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதேபோல், நாம் தமிழர் கட்சி, அமமுக, உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில், பாஜக போட்டியிடுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. அதேபோல் தற்போது ஒபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகளாக இருக்கும் அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தொடர்பான பரபரப்பும் நிலவி வந்தது.

இதனிடையே இன்று காலை அதிமுகவின் இபிஎஸ் அணி தங்களது வேட்பாளரை அறிவித்தது. இதனால் பாஜக அதிமுகவுக்கு ஆதரவு அளிக்குமா அல்லது இந்’த இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுமா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே ஒபிஎஸ் தரப்பு தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கூட்டணி தலைவர்களுடன் என்ன பேசினோம் என்பதை சொல்வது நாகரிகம் இல்லை. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இதுவரை ஆளும்கட்சியே பண பலத்தை பயன்படுத்தி எப்பொழுதும் வெற்றி பெற்றுள்ளது. எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

எங்களை பொறுத்தவரை ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பது தான். எனவே, எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மெரினாவில் கலைஞர் பேனா சிலை வைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறது. இது குறித்து நேற்று நடந்த கருத்து கேட்பு கூட்டம் அரசு நடத்தியதா அல்லது தி.மு.க நடத்தியதா என தெரியவில்லை.

அந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என தான் பேசியுள்ளார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும். தி.மு.க தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் என்ன செய்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தப் போகிறது.

இடைத்தேர்தல் என்பது எந்த கட்சியின் பலத்தையும் நிரூபிப்பதற்கானது அல்ல. பேனா சிலை விவகாரத்தில் தமிழர்களோடு கைக்கோர்க்க தயாராக இருக்கிறோம். மீனவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அதிமுக இபிஎஸ் அணி கூட்டணி பெயரை மாற்றி இருப்பது குறித்து உரிய நேரத்தில் பதில் அளிப்பேன்.

Exit mobile version