முப்படை தளபதி மரணம் குறித்து சிரிக்கும் எமோஜியுடன் கேலியாக பதிவிட்ட அப்ரீன் ஹாசன்.. பணியிடை நீக்கம் செய்த வங்கி.

இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிஹாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்தார். பிபின் ராவத் மரணம் செய்தி குறித்து சிரிக்கும் எமோஜியுடன் கேலியாக பதிவிட்டஅப்ரீன் ஹாசன் என்ற வங்கி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் இரு தினங்களுக்கு முன் குன்னூரில் கோர விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ராணுவர் வீரர்கள் உள்பட 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டினை அதிர்ச்சிகுள்ளாக்கியது .

இவர்களின் மறைவிற்கு மொத்த இந்தியாவே துக்கம் அனுசரித்து வருகிறது. நாடு முழுக்க மக்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மரணம் குறித்து சந்தேகம் எழுப்பி சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படை கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு காஷ்மீர் வங்கி, பிபின் ராவத்தின் மரணம் குறித்து சமூக ஊடகத் தளத்தில் அவதூறான கருத்துக்களைக் கூறியதற்காக அப்ரீன் ஹாசன் நகாஷ் என்ற ஊழியரை இடைநீக்கம் செய்துள்ளது. தவறான கருத்துக்களை பரப்ப கூடாது என வங்கி பல சுற்றறிக்கைகளை வெளியிட்ட போதிலும், அப்ரீன் ஹாசன் என்ற ஊழியர் சமூக ஊடக தளத்தை தவறாகப் பயன்படுத்தியதாக வங்கி தனது இடைநீக்க உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில், “வங்கியின் நலன்கள், விதிகளுக்கு மாறாக ஊழியர்கள் சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து அவ்வப்போது சுற்றறிக்கைகள் பலமுறை வெளியிடப்பட்டிருந்தாலும்,இதுபோன்ற ஒரு சம்பவத்தில், தங்கள் ஊழியர்களில் ஒருவர் சோகமான விபத்து குறித்து சமூக ஊடக தளத்தில் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பணியாளரால் வெளியிடப்பட்ட உள்ளடக்கங்கள் முற்றிலும் அவதூறானவை மற்றும் சேவை நடத்தை விதிகளுக்கு எதிரானவை என்று உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில், “உள்ளடக்கங்கள் முற்றிலும் அவதூறானவை மற்றும் ஒரு பணியாளரின் சேவைகளை நிர்வகிக்கும் நடத்தை விதிகளுக்கு இணங்கவில்லை மற்றும் தவறான நடத்தைக்கு சமமானவை”. மேலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.யில் கருத்து தெரிவித்து வந்த நபர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Exit mobile version