பீஹாரிகளுக்கு நம்மள விட மூளையெல்லாம் கிடையாது அமைச்சர் நேரு! அப்போ பிரசாந்த் கிஷோர் பக்கத்து வீட்டுக்காரரா! வச்சு செய்த நெட்டிசன்கள்!

அமைச்சர் நேரு தலைமையில் நேற்று தி.மு.க. சார்பில், ‘திசை காட்டும் திருச்சி’ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை துவக்கி வைத்து, தலைமை தாங்கினார் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு
அவர் இளைஞர்கள் மத்தியில் காரசாரமாக பேசுவதாக நினைத்து கொண்டு மற்ற மாநிலங்களின் மக்கள் பற்றி சற்று நக்கலாக பேசினார்.

அவர் பேசுகையில் பொன்மலை ரயில்வே பணிமனையில், 4,000க்கும் மேற்பட்ட பீஹார்காரர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, தமிழகம் முழுதும் ரயில்வே கேட்டிற்கு கேட் கீப்பராக அவர்களை பார்க்கலாம்.அவர்களுக்கு ஹிந்தியும் தெரியாது. ஒன்றும் தெரியாதவர்கள் இப்படி அரசு பணியில் இருப்பதற்கு பீகாரை சார்ந்த ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தான். அவங்க ஊர்க்காரர்களை எல்லாம், தேர்வில் பிட் அடித்து பாசாக்கி, ரயில்வேயில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவர்களுக்கு தமிழும் தெரியாது; ஹிந்தியும் தெரியாது. பீஹார்காரர்களுக்கு நம்மை விட மூளை அவ்ளோ இல்லை.என பேசினார்.

தென் மாநிலங்களை ஒப்பிடுகையில், கேரளாவிற்கு அடுத்தபடியாக, தமிழக இளைஞர்கள் அதிக புத்திசாலித்தனம் மிக்கவர்கள். எனவே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசு பணிகளுக்கு அதிகளவில் முயற்சிக்க வேண்டும். என்னை கருணாநிதி எப்போதோ எம்.பி., ஆக சொன்னார். எனக்கு ஹிந்தியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது எனக் கூறி, அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். இப்போது வருத்தப்படுகிறேன்.இவர் சொல்வது ஹிந்தி தெரியாது ஆங்கிலம் தெரியாது என்பதற்காகவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவனின் தேர்தல் ஆலோசனை குழுவிற்கு 380 கோடி கொடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிசோரை நியமித்தது திமுக, அவர் என்ன பக்கத்துக்கு வீட்டுக்காரரா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்!

Exit mobile version