தமிழக பா.ஜ.க 2024 தேர்தலை முன் வைத்து கள பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களை குறிவைத்து தேர்தல் வேலைகளை தற்போதே முடிக்கிவிட்டுள்ளது.சரியாக செயல்படாத நிர்வாகிகளை கழட்டிவிட முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தார். அண்ணாமலை.
தனியாக களம் கண்டால் பாஜகவின் பலத்தை நிரூபித்து விடாலாம் என்ற கணக்கோடு காளத்தில் களமிடுகிறார் அண்ணாமலை. பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்கவும் வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகிறதாம்.
மேற்கு பகுதியில் அதிமுக ஓரளவுக்கு வாக்கு வங்கியை வைத்துள்ளது.இதனால் தான் பா.ஜ.க தென் மாவட்டங்களை குறிவைத்துள்ளது. மாநில அளவில் சரியாக செயல்படாத 14 தென்மாவட்ட நிர்வாகிகளை களையெடுக்க பா.ஜ.க மாநில தலைமை முடிவெடுத்துள்ளது. மேலும் டி.டி.வி தினகரனுடன் சந்திப்பும் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது எடப்பாடி தரப்பை கடுப்பேற்றியுள்ளது.
ஏப்ரல் 14ல் நடைபயணம் துவங்க இருந்த அண்ணாமலையின் பாதயாத்திரை கர்நாடக தேர்தல் அறிவிப்பு வந்த காரணத்தால் தள்ளி போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. பாதயாத்திரை துவங்கும் முன் கட்சியில் பல மாற்றங்களை நிகழ்த்த உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பூத் அளவில் கட்டமைப்பு வலுவாக இருந்தால்தான் தி.மு.க. போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்பதால் இந்த மாற்றத்திற்கு தலைமை யோசித்துள்ளது. பல மாவட்டங்களில் பூத்கமிட்டிகளில் ஆட்களை இன்னும் அமைக்காமல் உள்ளனர்.
சில மாவட்டங்களில் அணிகள், பிரிவுகளின் நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து அவர்களின் செயல்பாடுகளை கவனிக்காமல் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை மந்தமாக உள்ள பகுதிகள், கட்சிக்கு புதியவர்களை கொண்டு வராதவர்கள் என நிர்வாகிகள் மீது அதிருப்தி நிலவுகிறது. மேலும் தென்மாவட்ட மாநில நிர்வாகிகள் சிலர் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் தலைமை கருதுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















