பா.ஜ.க விற்கு படையெடுக்க 41 திமுக எம்.எல்.ஏக்கள்ரெடி! வேற லெவல் ஸ்கெட்ச்! அதிர்ந்த அறிவாலயம்!

கடந்த 10 ஆண்டுகாலமாக திமுக ஆட்சியில் இல்லாத காரணத்தால், அக்கட்சியின் சீனியர் மாஜி அமைச்சர்கள் பலரும் அமைச்சரவையில் வெயிட்டான பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால், அமைச்சரவைபட்டியலை பார்த்து அனைவரும் அதிர்ந்துபோயினர். காரணம், சீனியர் மாஜிக்களுக்கு
எதிர்பார்த்த துறை கிடைக்கவில்லை.

இதனால், பலரும் கடும் அப்செட் அதேபோல, கட்சியில் சீனியர்களாக இருந்தும் இதுவரை அமைச்சர் பதவி கிடைக்காத எம்.ஏ.க்கள் பலரும், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள். அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்பதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

திமுக எம்.எல்.ஏக்கள் அதிமுகவுக்கு செல்வதால் எந்த பயனும் இல்லை. மேலும் அப்படியே சென்றாலும் திமுக வினர் சும்மா விடமாட்டார்கள் என்பதால் கண்பார்வையை பாஜக மீது திரும்பியுள்ளார்கள். மேலும் பாஜக மீது தமிழக மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என உளவுத்துறை திமுகவிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது. மீடியாக்கள் சப்போர்ட் இல்லாமல் பெரிய விளம்பரங்கள் இல்லமால் பாஜக வளர்ந்து வருவது திமுக தலைமைக்கு இடியை தூக்கி போட்டுள்ளது.

இந்த நிலையில் தான் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க. பக்கம் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.வருத்தத்தில் இருக்கும் 41 தி.மு.க.இருக்கிறது.எம்.எல்.ஏ.க்களுக்கு தூண்டில் வீசுவதுதான் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி தி.மு.க. மூத்த 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஆட்சி அமைக்க II6 இடங்களே போதும் என்கிற நிலையில்,திமு.க. மட்டுமே தனித்து 126 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.தி.மு.க.வைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள், மனிதநேய மக்கள் கட்சியில் 2 எம்ஏக்கள், தமிழக வாழ்வுரியை கட்சியின் 1 எம்.எல்.ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் | எம்.எல்.ஏ,
ஆகியோரும் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள், எனவே, திமுகவின் பலம் 134 ஆக இருக்கிறது.

ஆனால் தங்களுக்கு என கட்சியை வைத்துக்கொண்டு திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மீதும் வழக்குகள் இருப்பதால் அவர்களின் சட்டமன்ற பதவியை தக்கவைக்க போராடி வருகிறார்கள். இதுவும் திமுகவிற்கு சற்று தலைவலியை கொடுத்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களும் திமுக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். இது உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பாதித்தால் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு நகர்வது உறுதியாகிவிடும். மேலும் இது குறித்து அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது . “அ.தி.மு.க.வின்‌ 10 அண்டுகால ஆட்சியில்‌ பல்வேறு இன்னல்களையும்‌ தாக்குப்பிடித்து தி.மு.கவில்‌ நீடி,த்தவர்கள்‌, மீண்டும்‌ தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன்‌ தங்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்‌ என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்‌. ஆனால்‌, முதலமைச்சர்‌ ஸ்டாலினின்‌ மூவ்‌ சீனியர்களுக்கு செக்‌ வைக்கும்‌ வகையில்‌ அமைந்து விட்டது. உதாரணமாக, கட்சியின்‌ பொதுச்செயலாளரான தனக்கு பொதுப்பணித்துறை கிடைக்கும்‌ என்று அனைவரிடம்‌ கூறி வந்தார்‌ துரைமுருகன்‌.ஆனால் அவருக்கு நீர்வளத்தை மட்டும்‌ தனியாக பிரித்து அமைச்சராக அறிவித்தார்‌ ஸ்டாலின்‌. இதனால்‌அதிர்ந்துபோன துரைமுருகன்‌, தனக்கு அமைச்சர்‌ பதவியே வேண்டாம்‌ என்று புலம்பியதைத்‌ தொடர்ந்து, கனிமவளத்துறை கொடுக்கப்பட்டது.

அதேபோல, தனக்கு உள்ளாட்சித்‌ துறை கிடைக்கும்‌ என்று எதிர்பார்த்து காத்திருந்த கே.என்‌.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்‌ துறையை மட்டும்‌ வழங்கியதால்‌ ஏமாற்றம்‌ அடைந்து விட்டார்‌. அதேபோல, ஐ.பெரியசாமிக்குகூட்டுறவுத்‌ துறையை ஒதுக்கியதால்‌, மிகுந்த மனவருத்தத்தில்‌ நீண்ட நாட்கள்‌ தலைமைச்‌
செயலகத்திற்கே வராமல்‌ திண்டுக்கலிலேயே தங்கிவிட்டார்‌. இப்படி. பல சீனியர்கள்‌ தங்களுக்கு எதிர்பார்த்த இலாகாக்கள்‌ கிடைக்காததால்‌ அதிருப்தியில்‌ இருந்து வருகின்றனர்‌.

அதேசமயம்‌, ௮.தி.மு.க.வில்‌ இருந்து விலகி தி.மு.க.வில்‌ இணைந்த சேகர்பாபு, எ.வ.வேலு, ராஜகண்ணப்பன்‌, செந்தில்பாலாஜி, முத்துச்சாமி, ரகுபதி உள்ளிட்ட 8 பேருக்கு அமைச்சரவையில்‌ இடம்‌ கொடுத்ததோடு,வெயிட்டான இலாகாக்களையும்‌ ஸ்டாலின்‌ ஒதுக்கினார்‌. இதுவும்‌ தி.மு.க.வின்‌ முக்கியத்‌ தலைவர்களை ஆத்திரமடையச்‌ செய்திருக்கிறது.

மேலும்‌, அமைச்சரவையில்‌ தங்களுக்கு இடம்‌ கடைக்கும்‌ என்று எதிர்பார்த்து தேர்தலில்‌ தாம்‌தூம்‌ என்று செலவு செய்த எம்‌.எல்‌.ஏ.க்களும்‌, பதவி கிடைக்காததால்‌ கடும்‌ அதிருப்தியில்‌ இருக்கிறார்கள்‌. அதேபோல்‌ புதிதாக எம்‌.எல்‌.ஏ. பதவிக்கு வந்தவர்களை அமைச்சர்கள்‌ திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அவர்கள்‌ சொல்லும்‌ எதையும்‌ நிறைவேற்றித்‌ தருவதும்‌ இல்லை. இன்னும்‌ சுருக்கமாக சொல்வது என்றால்‌, அத்தனை எம்‌.எல்‌.ஏ.க்களும்‌ எந்த மரியாதையும்‌ அதாயமும்‌ இல்லாத வருத்தத்தில்‌ இருக்கின்றனர்‌.

மேலும் தமிழக ஆளுநராக ஆர்‌.என்‌.ரவியை நியமித்திருக்கிறது மத்திய அரசு. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ஆளுநரின் டேபிளில் வைக்கப்பட்டுள்ளது. எத்தனை எம்.எல்.ஏ க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பதும் கையில் வைத்துள்ளார் ஆளுநர்.

ஆளுநர் ஆர்.என் ரவி வந்த பிறகு திமுக தான் நினைத்த படி ஆட்சி செய்யமுடியவில்லை சொந்த கடலூர் எம்.பி கைதாகி ஜாமீன் கூட பெறமுடியாத நிலையில் உள்ளார். எனவே கொலை வழக்கு உள்ள எம்.எல்.ஏக்கள் சற்று கலக்கத்தில் உள்ளார்கள். தலைமை காப்பாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பதவியும் கிடைக்கவில்லை என்ற வேதனையும் திமுக எம்.எல்.ஏ க்களை வாட்டி வருகிறது. என்றார்.

அதிருப்தியில்‌ இருக்கும்‌ 41 தி.மு.க. எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ குறித்த விவரத்தை உளவுத்துறை மூலம்‌ பா.ஐ.க.வும் வாங்கிவிட்டது . இதைத்‌ தொடர்ந்து, மேற்படி. 41 பேர்‌ பற்றியும்‌ முழுமையான தகவல்கள்‌ திரட்டப்படுகின்றன. இனி, ஓவ்வொரு எம்‌.எல்‌.ஏ.க்களின்‌ பிளஸ்‌ மற்றும்‌ மைனஸ்களை அறிந்து அவர்களைபாஜகவில் இணைத்து கொள்ளவது குறித்து முடிவெடுக்க பாஜக குழுவும் அமைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இப்போதே தி.மு.க. எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ பா.ஐ.கவுக்‌காக எந்த வேலையும்‌ செய்யத்‌ தேவையில்லை என்று சொல்லித்தான்‌ இழுத்து வருகிறார்கள்‌. பா.ஐ.க. சிக்னல்‌ தரும்போது தி.மு.க. தலைமைக்குஎதிராக அதிருப்தி குரல்‌ எழுப்ப வேண்டும்‌. கட்சிக்குள்‌ இருந்துகொண்டே குடைச்சல்‌ கொடுக்கவேண்டும்‌.அவர்களுக்கு எதிராக தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்க முயற்சித்தால்‌, ஒவ்வொரு அதிருப்தி எம்‌.எல்‌.ஏ.க்களாக குரல்‌ கொடுக்க வேண்டும்‌ என்று றியுள்ளனர்‌.திமுகவின் பாணியில் பாஜக வேலையினை தொடங்கிவிட்டது.

ஒரு கட்டத்தில்‌ 41 அதிருப்தி எம்‌.எல்‌.ஏ.க்கள்‌ கைக்கு வந்தபிறகு ஆட்சியைக்‌ கைப்பற்றும்‌ முயற்சியை பா.ஐ.க. மேற்கொள்ளும்‌. வரும்‌ நாடாளுமன்றத்‌ தேர்தலுக்குள்‌ இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்‌ என்பதை நோக்கி வேலைகள்‌ தொடங்கப்பட்டுள்ளன.

Exit mobile version