இந்தியா முழுவதும் பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் தயார். தமிழகத்தில் 15 தொகுதிகள் வரை வேட்பாளர்களை இறுதி செய்த பா.ஜ.க!

Modi

Modi

2024 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தல்நடைபெற உள்ளது. தேர்தல் திருவிழாவிற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அதற்கு எதிராக இண்டி கூட்டணி என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் 3 வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான அரசே அமையும் என கூறியுள்ளது . பாஜக தனி பெருபான்மையுடன் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்து வருவதனால் பாஜக தனது வேட்பாளர்களை 3 மாதத்திற்கு முன்பாகவே அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆனால் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெறும் ஆலோசனை கூட்டம் தான் நடத்துகிறேதே தவிர வேற எந்த வித முன்னேற்றமும் கூட்டணியில் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. திரிணமுல் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது.

மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதிகளிலும் தன் கட்சி போட்டியிடும் என்கிறார் மம்தா. இன்னொரு பக்கம், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மியும், அந்த மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

இதனால் காங்கிரசோ கடுப்பில் உள்ளது. மேலும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ‘ பாத யாத்திரைக்கு தயாராகி விட்டார் ராகுல் காந்தி. இது கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி பிரச்சனைகளை களையாமல் பாதயாத்திரை தேவை இல்லாத ஒன்று சீனியர் தலைவர்களே புலம்புகின்றனர்

மார்ச் இறுதி மற்றும் ஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் எப்போது என்றும், அது எத்தனை கட்டமாக நடைபெறும் என்றும், பிப்ரவரி மாதத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என சொல்லப்படுகிறது.
.
ஆனால் பாஜகவோ பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டதாம்.இந்த வேட்பாளர் பட்டியல் மாத இறுதியில் பட்டியல் வெளியாகும் என்கின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டபேரவை சட்டசபை தேர்தலில் இதே போன்ற முறையை தான் கடைப்பிடித்து, வேட்பாளர்களை அறிவித்தது பா.ஜ.க தலைமை. இதனால் கட்சிக்குள் எந்தவித குழப்பமும் இல்லை; பிரசாரம் செய்யவும் போதிய நேரம் கிடைத்தது. எனவே, இதே திட்டத்தை வரும் பராளுமன்ற தேர்தலிலும் கடைப்பிடிக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 10 முதல் 15 பாராளுமன்ற தொகுதிகளுக்குவேட்பாளரை இறுதி செய்துள்ளது.
கன்னியாகுமரி, கோவை,தென்சென்னை, காஞ்சிபுரம், நீலகிரி,ராமநாதபுரம்,வேலூர்,சிதம்பரம்,தென்காசி,தூத்துக்குடி, ஈரோடு,திருப்பூர், விருதுநகர் சிவகங்கை மத்திய சென்னை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளது பா.ஜ.க.

வேட்பாளர் லிஸ்டில் பொன் இராதாகிருஷ்ணன்,வானதிசீனிவாசன்,எஸ்.ஜி.சூர்யா கே.டி ராகவன் நயினார் நாகேந்திரன், எல்.முருகன்,கார்த்திகாயினி,தடா பெரியசாமி, ஜி.கே நாகராஜ், இந்துமுன்னணி தலைவர் கடேஸ்வரா சுப்ரமணியம் ,இராம சீனிவாசன், பால் கனகராஜ் எச்.ராஜா வினோஜ் செல்வம் உள்ளிட்டோர் அடங்குவார்கள் மேலும் குஷ்பு, நிர்மலா சீதாராமன் ஆகியோர் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version