இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த மத்திய பிரதமர் மோடி அரசு பணியை தொடங்கிவிட்டார்கள்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையினை தொடர்ந்து,தற்பொழுது மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கவர்ணர் பதவி இதைத்தான் சொல்கின்றது
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” மிக அழகாக அக்கட்சியில் நடந்து கொண்டிருக்கின்றது, இது நல்ல விஷயம் ஆக திராவிட கட்சிகளால் தமிழனை பெரும் பதவிக்கு உயர்த்தவே முடியாது அதுவும் நாடளாவிய நிலையில் முடியவே முடியாது. திராவிட கட்சியில் இருந்தால் தமிழகத்தை தாண்டவே முடியாது, ஆனால் பாஜகவில் இருந்தால் கவர்ணர் வரை சுலபம் என தமிழர்களை தேசிய நீரோட்டம் நோக்கி அழைக்கின்றது பாஜக.
இது பாரதிய ஜனதா கட்சியில் பணிசெய்யும் அனைவரையும் கவுரவிப்பது என்பது வழக்கமாக வைத்துள்ளனர் .ஆனால் குடும்ப கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் இது சாத்தியமா மக்கள் தன் சிந்திக்கவேண்டும்.
கட்டுரை வலதுசாரி சிசிந்தனையாளர் ஸ்டேன்லி ராஜன்.