பா.ஜ.க நிர்வாகி கொலை – PFI, எஸ்டிபிஐயுடன் தொடர்புள்ள 15 பேருக்கு தூக்கு தண்டனை… நீதிமன்றம் அதிரடி

Kerala murder

Kerala murder

கேரளாவில் பா.ஜ.க ஓபிசி அணியின் மாநிலத் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் படுகொலை வழக்கில் 15 கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கி ஆலப்புழா மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 15 பேருக்கு தூக்கு என்பதால் இந்த தீர்ப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாசன். வழக்கறிஞரான இவர் பாஜக ஓபிசி அணியின் தலைவராகவும் இருந்தார். இவர், கடந்த 2021ம் ஆண்டு டிச.,19ல் வீட்டில் இருந்த போது மனைவி, குழந்தைகள் முன்பு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.இவர்கள் அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள்.

இந்த கொலை தொடர்பான வழக்கு ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பாஜக நிர்வாகி ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 12 பேருக்கு நேரடியாக தொடர்பு இருந்ததும், 3 பேர் உதவியாக இருந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்த நைசாம், அஹ்மல், அனுப், முகமது அஸ்லாம், சலாம் போனாட், அப்துல் கலாம், சப்ரூதீன், முன்ஷாட், ஜசீப் ராஜா, நவாஸ், ஷீமீர், நாசீர், ஜாகீர் உசைன், ஷாஜி , சம்னாஸ் அஸ்ரப் ஆகிய 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் 3வது பெரிய மரண தண்டனை வழக்காக பார்க்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version