கெத்து காட்டிய பாஜக வழக்கறிஞர்கள் திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்காத நீதிமன்றம் !

தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது அதுக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு..

திருச்செங்கோட்டில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகி மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகருக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்தவா் விசுவநாதன். இவா் பாஜகவில் தெற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்பப் பிரிவு பொறுப்பாளராக உள்ளாா். அண்மையில், அதே பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகா் மாணிக்கம் என்பவருக்கும், விசுவநாதனுக்கும் இடையே அரசியல் ரீதியாகவும், நிலப் பிரச்னை தொடா்பாகவும் மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது, விசுவநாதனையும், அவரது தாயாரையும் திமுக பிரமுகா் தாக்கி காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடா்பாக பாஜகவினரின் தொடா் வற்புறுத்தலால் மாணிக்கம் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், முன்ஜாமீன் கோரியும், நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மாணிக்கம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது வியாழக்கிழமை விசாரணை நடைபெற இருந்த நிலையில் மாணிக்கத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என பாஜக வழக்குரைஞா்கள் 40 போ் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து திமுக பிரமுகா் மாணிக்கத்திற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதை ஒத்திவைத்தது. இதனையடுத்து வழக்குரைஞா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

நன்றி தினமணி.

Exit mobile version