காலில் விழுந்தவரின் காலில் விழுந்த பாஜக தலைவர் அண்ணாமலை.

ஈரோடு அருகே, தனது காலில் விழுந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவரின் காலை அண்ணாமலை தொட்டு பதிலுக்கு கும்பிட…

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மலை கிராமத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்குள்ள ஒரு வீட்டின் தரையில் அமர்ந்து உணவருந்தினார். பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மலை கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த பாஜக தலைவர் அண்ணாமலை, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து, தாமரைக்கரை கீழ் காலனி பகுதியை சேர்ந்த பொம்மி, கேருச்சி தம்பதியினரின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

அப்போது மலைவாழ் மக்களில் உள்ள சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி என்ற சமூக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மலையாளி என்ற சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டத்தில் கொடுப்பது போல சாதி சான்றிதழ் கொடுப்பது இல்லை என்று கூறி அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவர் அண்ணாமலையின் காலில் விழுந்தார்.

பதிலுக்கு அவரது காலில் திரும்ப விழுந்த அண்ணாமலை கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தவரை தனது தோளில் சாய்த்து ஆறுதல் கூறி, வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் போது உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சோளகர் சமூகத்தை சேர்ந்த மலைவாழ் மக்களான பூமிகா-வெள்ளையன் என்பவரது வீட்டில் மதிய உணவாக களி உணவு விரும்பி சாப்பிட்டார். பின்பு அங்கு உள்ள மலைவாழ் மக்களுடன் செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.

Exit mobile version