பாஜக பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து 10 தொகுதி ஒதுக்கீடு.

பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. ஜனநாயக திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் ஜெட் வேகத்தில் பறக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. 267 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கட்சி சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு பம்பராமாய் சுழன்று வருகிறார். கடந்த முறையை விட இந்த முறை அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள, தைலாபுரம் தோட்டத்தில்,பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசை சந்திக்க,தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தனர்.உடன் பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம்,அஸ்வதம்மன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் இருந்தனர்.

இன்று காலை பாஜக பாமக கூட்டணி கையெழுத்தான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த முறை 10 இடங்களில் பாமக போட்டியிட்டது. இந்த முறையும் அதுவே தொடரும் எனவும், எந்த தொகுதி என்பது நாளை இறுதிச் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

.இந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.வட மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கி பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியை தற்போது பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version