பாஜக சார்பில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிப்பு…..

திர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிப்பு.ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு, அம்மாநில அமைச்சராகவும் ஜார்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.முதல் முறையாக பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண், குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் ஜூன் 29-ஆம் தேதி கடைசி தேதியாகும். தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version