கொங்கு மண்டலத்தில் வெற்றி வாகைசூடும் பா.ஜ.க! காணாமல் போன அ.தி.மு.க தி.மு.க!வெளிவந்த புதிய கருத்துக்கணிப்பு!

BJP VS ADMK VS DMK

BJP VS ADMK VS DMK

தமிழக பா.ஜ.க கொங்கு மண்டலத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் பா.ஜ.கவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்கள். மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தை பா.ஜ.க கைப்பற்ற வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது தமிழக பாஜக.

கோவை, சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம்.இந்த பகுதிகளில் பாஜகவுக்கு எப்போதுமே கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. மேலும் இந்த முறை தனியாக களம் காண இருப்பதால் கொங்கு மண்டலத்திற்கு இந்தமுறை அளவுக்கு அதிகமாகவே கவனம் செலுத்தி வருகிறது தமிழக பா.ஜ.க அதன் காரணமாகவே திருப்பூரில் என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவை கொங்கு மண்டலத்தில் நடத்துகிறது.பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார்.

மேலும் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில், வேட்பாளர்களையும் பா.ஜ.க கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.மேலும் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரின் வேலைப்பாடுகளும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜகவிற்கு வாக்கு வங்கியும் உயர்த்தியுள்ளது. கடந்த 2 வருட காலமாகவே களப்பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பாஜக..

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் பா.ஜ.க 20.4 சதவீத ஓட்டுகளை அள்ளும் இரண்டாமிடம் பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., 16.3 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் என முடிவுகள் தெரிவித்திருந்த நிலையில் அதிமுகவின் கோட்டை என கூறிக்கொள்ளும் கொங்குமண்டலம் தற்போது பா.ஜ.கவின் கோட்டையாக மாறியுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின், ‘என் மண்; என் மக்கள்’ நடை பயணம், மக்களின் கவனத்தை பெருவாரியாக ஈர்த்துள்ளதே பா.ஜ.,வின் ஓட்டு வங்கி அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பா.ஜ.கவுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில் கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.வருகிற தேர்தலில் கோவை தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்று “நியூஸ் கிளவுட்” என்ற தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது.. இந்த கருத்துக்கணிப்பு கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க வெற்றி தி.மு.க அ.தி.மு.கவை விரட்டியுள்ளது பாஜக.

“பல்வேறு தரப்பினரிடம் மொத்தமாக சேர்த்து 1596 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக கூட்டணி மற்றும் திமுக கூட்டணியை பின்னுக்கு தள்ளி பாஜக 663 வாக்குகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. திமுக கூட்டணி 593, அதிமுக கூட்டணி 194, நாம் தமிழர் கட்சி 89 வாக்குகளை பெற்றுள்ளது. மற்றவை என 57 பேர் வாக்களித்துள்ளனர்.

அபார வளர்ச்சி: பாஜக அபாரமாக இங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. தலைவர் அண்ணாமலையின் போராட்ட குணம், நேர்மை, பண்பு, அவரின் தலைமையில் பாஜக உள்ளது ஒரு காரணமாக உள்ளது. திமுக தரப்பில் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினரின் ஊழல், கறைபடிந்த கைகள், அடாவடிதனம், ரவுடியிசம், கட்டபஞ்சாயத்து, வசூல் வேட்டை போன்றவையும் இன்னொரு காரணமாக உள்ளது,

1998-ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளை விடுதலை செய்வோம் என்று திமுக, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசி வருவதும் கோவை பகுதி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உள்ளாக்கியிருக்கிறது. சிறுபான்மை மக்களின் வாக்குக்காக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்கள் ஆவேசத்தில் உள்ளனர்.

அதிமுக: அதே நேரத்தில் அதிமுகவினரும் திமுகவிற்கு சளைத்தவர்கள் கிடையாது என்பது போல் கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பேசி வருவதும் கோவை பகுதியில் அதிமுக செல்வாக்கு சரிவிற்கு மிகமுக்கிய காரணமாகும்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கோவை மாநகராட்சி வரி பன்மடங்கு உயர்வு, பத்திர பதிவு வரி உயர்வு, மானியங்கள் குறைப்பு, அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே பல திட்டங்களை திமுக முடக்கியது போன்றவையும் திமுகவுக்கு பாதகமாக பேசப்படுகிறது.

அண்ணாமலை: இதைத்தொடர்ந்து அண்ணாமலையும் திமுகவின் ஊழல் பட்டியல்களை தொடர்ந்து வெளியிட்டு வருவது பொதுமக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு நீள்கிறது. இது கோயம்புத்தூர் மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் வாக்குகளை பெற்று தந்துள்ளது.

அண்ணாமலையின் நடைபயணத்தை மேற்கொண்டதும் கோவை மக்களின் மனதில் பாஜகவின் தாக்கத்தை அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது. மேலும், கேரளா கம்யூனிஸ்ட் அரசு கோவைக்கு தர வேண்டிய சிறுவாணி ஆற்று தண்ணீரை தர மறுப்பதும், அதை கோவை கம்யூனிஸ்ட் எம்.பி. கேட்க மறுத்து அமைதி காப்பதும், திமுக கூட்டணியான கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை தந்துள்ளது.

ரயில்கள்: கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டுமானம் ஏற்படுத்தியது, கோவை-சென்னை, கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களை மத்திய அரசு கொடுத்தது, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையை மருத்துவ கல்லூரியாக மத்திய அரசு தரம் உயர்த்தியது, போன்றவை அனைத்துமே, கோவையை மையப்படுத்தி மத்திய பாஜக அரசு திட்டங்களை அறிவித்தது, அம்மாவட்ட மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு உயர காரணமாகும்” என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Exit mobile version