உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி – தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு வெளியானது!

அடுத்த வருடம் பிப்ரவரியில் உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற இரு க்கிறது இதற்கான முதல் கருத்து கணி ப்பு வெளியாகி இருக்கிறது. இதன்படி பிஜேபிக்கு 265 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கூறுகிறார்கள்இப்பொழுது நடைபெற்ற கருத்து கணிப்பு பிஜேபிக்கு எதிராக கூட்டணி எதுவும் ஏற்படாத நிலையில் எடுக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் பொழுது சமாஜ் வாடி காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்புகள்இருக்கிறது.

இருந்தாலும் சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி பிஜேபியின் வெற்றி க்கு கடுமையான போட்டியை தான் அளிக்க முடியுமே தவிர வெற்றியை பாதிக்காது பகுஜன் சமாஜ் கட்சி சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் தான் பிஜேபி்க்கு டேஞ்சர். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை.

பீகார் சட்டமன்ற தேர்தலில் நடைபெற்றது மாதிரியே உத்தரபிரதேச தேர்தலிலும் 4 முனை 5 முனை போட்டிகள் உறுதி. என்பதால் பிஜேபி எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து பிஜேபி ஆட்சிக்கு வந்து விடும். அசாதுதீன் உவைசி உத்தர பிரதேசத்தில் டாக்டர் முகம்மது அயூபின் பீஸ் பார்ட்டி மற்றும் ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுகல்தேவ் பாரதிய சமாஜ் பார்ட்டியுடன் கூட்டணி வைத்து போட்டியிட இருப்பதால் சமாஜ்வாடி கட்சிக்கு முழு அளவில் முஸ்லிம் வாக்குகள் கிடைக்காது.

உத்தரபிரதேசத்தில் முஸ்லிம்களில் 3 பிரிவுகள் இருக்கிறது .அன்சாரி முஸ்லிம் அஷ்ரப் முஸ்லிம் பஸ்மந்தா முஸ்லிம் என்று மூன்று வகையான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இதில் அன்சாரி முஸ்லிம்கள் உருது பேசு ம் முஸ்லிம்கள். இவர்கள் முகலாயர் காலத்தில் இருந்து வரும் முஸ்லீம்கள்.இந்த அஷ்ரப் முஸ்லிம்கள் என்பவர்கள் மதம் மாறியவர்கள்.ராஜ்புத் ஜாட் குஜ்ஜார் யாதவ் குர்மி போன்ற ஜாதி மக்கள் மதம்
மாறி தங்களை அஷ்ரப் முஸ்லிம் என்று கூறிகொண்டார்கள்.

இந்த அஷ்ரப் முஸ்லிம்கள் உயர் சாதி முஸ்லிம்கள் என்று கூறி கொள்கிறார்கள். இவர்கள் பஸ்மந்தா முஸ்லிம்களை மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாறிய தலித்களாகும்.இந்த பீஸ் பார்ட்டி இருக்கிறது அல்லவா அது உயர் சாதி முஸ்லிம்களான அஷ்ரப் முஸ்லிம்களுக்காக உருவான கட்சி.மத்திய உத்தர பிரதேசம் மற்றும் கிழக்கு உத்த ர பிரதேசத்தில் செல்வாக்குஉள்ள கட்சிகடந்த 2017 உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு மிகப்பெரிய மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்க முக்கியகாரணம் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந் து பிரிந்த இரண்டு தலைவர்கள் உருவாக்கிய கட்சிகள் தான்.

ஒன்று ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுகல் தேவ் பாரதிய சமாஜ் கட்சி .இன்னொன்று சஞ்சய் நிஷாத்தின் நிஷாத் பார்ட்டி.கடந்த 2017 உத்தர பிரதேச தேர்தலில் சஞ்சய் நிஷாத் முஸ்லிம் கட்சியான பீஸ்பார்ட்டியுடன் கூட்டணி வைத்து பிஜேபி க்கு எதிரான தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகளை சமாஜ் வாடி காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல விடாமல் தடுத்தார்ஓம் பிரகாஷ் ராஜ்பார் பிஜேபி கூட்டணிக்கு தலித் மக்களின் வாக்குகளை கொண்டு வந்தார். இதில் தலித் முஸலிம்களாகிய பஸ்மந்தா முஸ்லிம்களும் இருந்தார்கள்.2017 உத்தர பிரதேச தேர்தலில்பிஜேபியின் மிகப்பெரிய வெற்றிக்கு ஓம் பிரகாஷ் ராஜ்பாரும் முக்கிய காரணமாக இருந்தார்.

இதனால் யோகி அமைச்சரவையில் ஓம் பிரகாஷ் ராஜ்பார் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.ஆனால் யோகியின்அதி தீவிரமான இந்துத்வா அரசியலை எதிர்த்து பிஜேபி கூட்டணியில் இருந்து வெளி வந்து விட்டார் ஓம் பிரகாஷ் ராஜ்பார் இப்பொழுது பகிதாரி சங்கல்ப் மோர்ச்சா என்கிற ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்.இதில் நிறைய சிறிய ஜாதி கட்சிகள் இ ணைய இருக்கிறது.இதில் அசாதுதீன் உவைசி இருப்பதால் நிச்சயமாக சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணியில் இணையாது.எனவே பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை
ராஜ்பார் உருவாக்கும் கூட்டணி பிரித்து விடும்.

இந்த முறை பிஜேபி நிஷாத் பார்ட்டி மற் றும் அப்னா தளம் கூட்டணியோடு களம் காண இருக்கிறது.இந்த கூட்டணியே பிஜேபியை வெற்றி பெற வைத்து விடும் ஆனால் பிஜேபிக்கு மாபெரும் வெற்றி கிடைக்குமா? இல்லை சராசரி வெற்றி கிடைக்குமா? என்று காங்கிரஸ் சமாஜ் வாடிகூட்டணி தான் முடிவு செய்யும். சமாஜ்வாடி காங்கிரஸ் கூட்டணி இல்லையென்றால் பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் .ஒரு வேளை காங்கிரஸ் கடைசி நேரத்தில் மானத்தை காப்பாற்ற சமாஜ்வாடி கூட்டணியில் இணைந்தால் நிச்சயமாக பீகார் மாதிரி கடுமையான போட்டியில் தான் வெற்றி பெற முடியும். என்கிறது கருது கணிப்பு!

Exit mobile version