மேற்கு வங்க மாநிலத்தை 2 ஆக பிரித்து வடக்கு மேற்கு வங்க பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பது அம்மாநில பாஜக தலைவர்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கை படுதீவிரமாக வலியுறுத்தி வருபவர் பா.ஜ.க. எம்.பி. ஜான் பர்லா.அவர்கள்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்தது . மே 2ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வெ(ற்)றியாட்டம் ,இந்தியவை நிலைகுலைய வைக்கிறது. மேற்கு வாங்க மக்கள் சொந்தம் ,சொத்து ,அனைத்தையும் இழந்து நிற்கும், மக்கள் நிற்கதியாக நிற்கிறார்கள். காரணம் திரிணமூல் காங்கிரஸின் (TMC) வெற்றி.ஜனநாயகத்தை புதைத்து அதன் மீது திரிணாமுல் காங்கிரசின் வெறியாட்டம் நடந்தேறியுள்ளது. தாக்கப்பட்டவர்கள் பாஜகவிற்கு ஒட்டு போட்டவர்கள் என்று கூறுகிறது உண்மை அறியும் குழுவின் ஆய்வு அறிவிக்கை.
மேற்குவங்கம் சிலிகுரி அடுத்துள்ள புதிய ஜல்பாய்குடி போன்ற எல்லைப்புற மாவட்டங்களில் வன்முறையின் கொடுமைகள அதிகம். சுமார் 2200 மக்கள் அடித்து விரட்டப்பட்டும் தப்பித்தும் அஸ்ஸாம் மற்றும் பீஹாரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.5000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடு திரும்பவில்லை. 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீது பலமான தாக்குதல்கள் நடந்துள்ளன.யாராவது புகார் கொடுக்க காவல்துறை சென்றால் எந்த புகாரையும் வாங்க மறுக்கின்றனர். அடிபட்ட காயம்பட்ட மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் அளிக்கப்படவில்லை . சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே அதை மீறுகிறது. 7,000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் நடப்பது கொடுங்கோல் ஆட்சி என்கிறார்கள். பல ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சியினை நடத்தி வரும் மம்தாவின் அடக்குமுறையை தாங்க முடியாத வட பகுதி மக்கள் தங்கள் பகுதியை மேற்குவங்கத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க பல ஆண்டுகளாக கோரி வருகிறார்கள்.
தனி மாநிலமாக பிரிக்க கோரும் ஜான் பர்லா சமீபத்தில் மோதி அமைச்சரவை விரிவாக்கத்தில் இணை அமைச்சர் நான்கு நாட்களுக்கு முன் பொறுப்பேற்றதும் அதை திரிணாமூல், “மோதி மாநில பிரிவினைக்காகவே ஜானுக்கு இணை அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்” என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே புதிய மாநிலங்கள் உருவானால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.