முதுகெலும்பு தசைநார் பாதிப்புக்குள்ளான கே.எஸ்.மித்ரா என்ற 23 மாத பெண் குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக உயிர் காக்கும் மருந்து “ஜோல்கென்ஸ்மா” கொள்முதல் செய்வதற்காக, ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு வரிகளை தள்ளுபடி செய்ய திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களிடம் தமிழக மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை அவர்கள் கடிதம் ..
“மித்ரா என்ற 23 மாதமே ஆன பெண் குழந்தை முதுகெலும்பு தசைநார் சிதைவு ( Spinal Muscular Atropy) என்ற நோயால் பிறந்ததிலிருந்து பாதித்துள்ளது. அக்குழந்தையின் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இரண்டு வயது நிறைவடைவதற்குள் Zolgensma என்ற நோய் தீர்க்கும் மருந்தை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
அம்மருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது, மேலும் மருந்தின் விலை இந்திய மதிப்பில் ரூ. 16 கோடி ஆகும். அதற்கான ஜி.எஸ். டி, மற்றும் ஏனைய வரிகள் மட்டுமே கிட்டத்தட்ட 6 கோடியை நெருங்குகிறது. குழந்தை மித்ராவின் தந்தை நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவரால் அந்த மிகப்பெரிய தொகையை தனியாக கொடுக்க முடியவில்லை. பல தொண்டு நிறுவனங்களும், சில நல் உள்ளங்களும் அவருக்கு உதவியதால் மித்ராவின் மருந்துக்கு தேவையான ரூ. 16 கோடியை அவர் சேர்த்துள்ளார்.
குழந்தை ஏற்கனவே இரண்டு வயதை கடந்துவிட்டதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி உடனடியாக இந்த மருந்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மித்ராவின் பெற்றோர்கள் உள்ளனர். அதனால் தாங்கள் கருணையோடு பரிசீலித்து மருந்துக்கான ஜி.எஸ். டி வரியை நீக்கி அக்குழந்தையின் சிகிச்சைக்கு உதவி அவர்களுடைய பெற்றோர்களின் முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்திட செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்