பாரதிய ஜனதா கட்சி இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறதா ?

பாரதிய ஜனதா கட்சி
இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறது; மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அவதூறு பரப்பி வருகிறார்கள். இது வடிகட்டினப் பொய். ஜமுக்காளத்தில் வடிகட்டினப் பொய்.

BJP-யும் RSS-ம் நம் நாட்டு மொழிகள் அத்தனைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இன்று, நேற்றல்ல; பல ஆண்டுகளாகவே இதுதான் எங்கள் நிலைப்பாடு. IAS, IPS உள்ளிட்ட பதவிகளுக்கானக் குடிமைப் பணி தேர்வுகளைக் கூட மாணவர்கள் விரும்பும் மொழியிலேயே எழுத அனுமதிக்க வேண்டும் என்று தான் நாங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பாகவே வலியுறுத்தினோம்.

NEET-ஐ கூட தமிழிலும் எழுத வழிவகை செய்திருக்கிறது BJP அரசு.

புதிய தேசிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்து நேற்றோடு ஒருவருடம் நிறைவடைந்திருக்கிறது. அதனை முன்னிட்டு, நம் நாடு முழுவதும் Engineering கல்வியைப் பிராந்திய மொழிகளிலும் படிப்பதற்கு வழிவகை செய்திருக்கிறது மோடிஜி தலைமையிலான மத்திய அரசு.

English-ல் மட்டுமே படிக்க முடியும் எனும் நிலையை மாற்றி, எல்லா மொழிகளிலும் படிக்க முடியும் எனும் நிலையைக் கொண்டு வருகிறது பாஜக அரசு. மிக்க மகிழ்ச்சி!

நாம் ஆங்கிலத்துக்கு எதிரி அல்ல. அதேசமயம், நம் நாட்டு மொழிகள் அனைத்தின் வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்டவர்கள்.

தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் வித்தியாசம் உண்டு.

இந்தி மீதும், சமஸ்கிருதம் மீதும் வெறுப்பைப் பரப்பினால் மட்டும் போதும், நம்மைத் தமிழ் ஆதரவாளராகக் காட்டிக்கொள்ளலாம் என்று நாடகமாடும் திமுக.

எந்த மொழியின் மீதும் வெறுப்பைப் பரப்பாமல்
எல்லா மொழிகளையும் வளர்ப்பதற்குத் தேவையானக் காரியங்களைச் செய்யும் பாஜக.

வீர.திருநாவுக்கரசு,பாஜக மாநில இளைஞரணி செயலாளர்.

Exit mobile version