பாஜகவை தோற்கடிப்பேன் என்றுகூறிய நடிகர் ப்ரகாஷ்ராஜ் நடிகர் சங்க தேர்தலில் படுதோல்வி.

தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார்.தெலுங்குத் திரைப்பட நடிகர் சங்கத்துக்கான (எம்ஏஏ) தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தலைமையிலான அணியும், அதை எதிர்த்து நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணியும் போட்டியிட்டன.

தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’(MAA) வுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் விஷ்ணு மன்சு தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன. தலைவர் பதவியை கைப்பற்ற பிரகாஷ்ராஜ், விஷ்ணு மன்சு இருவருமே மாறி மாறி நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர். பின்னர் இருவருமே ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி விமர்சித்தனர். இது சர்ச்சையானது.

இறுதியில் நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில நிர்வாகி SG.சூர்யா தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.அதில்

அதாவது வெறும் 665 ஓட்டுக்கள் கொண்ட ஒரு தனியார் அமைப்பின் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளார் நடிகர் ப்ரகாஷ் ராஜ். சரி அது நமக்கு தேவை இல்லை. ஆனால், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆங்கில தொலைகாட்சி விவாதத்தில் “கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க முடிந்தால் 56 எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் வென்று காட்டட்டும்” என்று சவால் விட்டார்.

தேர்தல் முடிவில் பா.ஜ.க மொத்தம் உள்ள 224 இடங்களில் 104 எம்.எல்.ஏ-க்களை வென்று முதன்மை கட்சியானது. தற்போது அங்கு 120 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சியிலும் உள்ளது. சரி, 2019-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ப்ரகாஷ் ராஜ் பெங்களூர் மத்தி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவர் வாங்கிய வாக்கோ 2%. அதே தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் மோகன் 6,02,853 வாக்குகள் பெற்று(50% வாக்குகளுக்கும் மேல்) அபாரமாக வென்றார்.

ப்ரகாஷ்ராஜோ 28,906 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.ஆக, 665 வாக்குகள் கொண்ட தனியார் அமைப்பு தேர்தலில் வெல்ல துப்பில்லாதவர், இந்தியாவில் பல தசாப்தங்களாக கோலோச்சிய நேரு குடும்பத்தாரையே அவர்கள் குடும்பத் தொகுதியில்(அமேதி) இருந்து ஓட விட்ட உலகத்தலைவர் நரேந்திர மோடியின் பா.ஜ.க-வுக்கு சவால் விடுவதெல்லாம் எவ்வளவு முதிர்ச்சியற்ற அரசியல் என்பதை தற்போதாவது புரிந்து இருப்பார் என நம்பலாம். ட்விட்டரில் பா.ஜ.க-வுக்கு எதிராக பல ட்வீட்கள் ட்ரெண்ட் ஆனதால், பா.ஜ.க இந்தியா முழுவதும் தோற்று விடும் என கணக்கிட்டு விடுத்த சவால்கள் தான் இவருடைய அரசியல் புரிதல் லட்சணம் என்பது வேடிக்கை.

என தனது கருத்தினை கூறியுள்ளார்.

Exit mobile version