பாஜக முக்கிய நிர்வாகி மீது வழக்கு தொடர்ந்து வசமாக சிக்கிய திருமாவளவன் !

சென்னை உயா் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவில், ‘ கடந்த 2003-ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோா் ஆணவக் கொலை செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் 13 போ் குற்றவாளிகள் என கடலூா் நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தீா்ப்பளித்துள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீா்ப்பு குறித்தும், என்னைப் பற்றியும் பாஜக முக்கிய நிர்வாகி தடா.பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞா் ரத்தினம் உள்ளிட்டோா் அவதூறு பரப்பும் விதமாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கருத்துக்களைக் கூறி வருகின்றனா். இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

என்னைப் பற்றிய குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மைகளை முழுமையாக விசாரிக்காமல் கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் மறுபதிவு செய்து வருகின்றனா். எனவே என்னைப்பற்றி அவதூறு பரப்பியதற்காக ரூ. 1 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப எதிா்மனுதாரா்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்,
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், “மனுதாரர் திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துக்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள சமூக வலைதளங்கள் வெளியிட தடை விதிக்கிறேன். இந்த வழக்கிற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 20-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

இதை சில சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளது. அவதூறு கருத்துக்களை பரப்பியதற்காக, தடா பெரியசாமி உள்ளிட்டோர் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும். இந்த வீடியோவை வெளியிட சமுக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இது குறித்து பாஜக நிர்வாகி தடா.பெரியசாமி நீதிமன்றம் வாயிலாக திருமாவளவனை அம்பலப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. “என்னிடம் கோடிகள் இல்லை! காவி கொடிகள் நிறைய உள்ளது!” கூடாநட்பு! கேடாய் முடியும்!! என கருத்தினை தெரிவித்துள்ளார்.


Exit mobile version