தீப்பெட்டி தொழிற்சாலை விவகாரம் அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்த பாஜக ராம சீனிவாசன் !

சாத்தூர் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், தற்போது சீனாவில் இருந்து வரும் சிகார் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் தமிழக பாஜக பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-

ஓர் ஆண்டுக்கு 1200 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்துகிற ஒரு தொழில் இது அது போல இந்த உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வருமான வரி செலுத்துகிறார்கள்

இந்த தீப்பெட்டி உற்பத்தியில் பணிபுரியும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற சீனாவின் சிகார் லைட்டர்களையும் அதன் உதிரி பாகங்கள் இந்தியாவிற்குள் வருவதையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு மாண்புமிகு வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்களை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். இதைப் பற்றி விரைவில் முடிவு எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version