கடந்த வாரம் இந்திய சீனா எல்லையில் நடந்த சண்டையில் இந்திய 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்துள்ளனர். சீனாவோ அந்நாட்டு வீரர்கள் இறந்ததை கூற மறுக்கிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க மக்கள்
முடிவு செய்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இந்திய பளுத்தூக்குதல் கூட்டமைப்பும் பட்டியலில் சேர்ந்துள்ளது.
பளுத்தூக்குதல் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சஹாதேவ் யாதவ் இது குறித்து பேசுகையில் , சீனாவில் தயாரான எந்த ஒரு உபகரணத்தையும் பயன்படுத்த மாட்டோம். இந்தியாவில் தயாராகும், மற்றும் பிற நாட்டில் தயாராகும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவோம்.
தேசியப் பளுத்தூக்குதல் பயிற்சியாளர் விஜய் சர்மா கூறுகையில் ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு சீன உபகரணங்களைத்தான் பயன்படுத்த உள்ளனர். எனவே இதைப் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கடந்த ஆண்டு சில உபகரணங்களை வாங்கினோம்.
ஆனால் சீன உபகரணங்கள் தரமற்றவையாக உள்ளன. மேலும் பயிற்சி முகாமில் உள்ள வீரர், வீராங்கனைகள் சீனப் பொருட்களைப் பயன்படுத்தும் மனநிலையில் இல்லை. டிக்-டாக் செயலிகளையே புறக்கணித்து விட்டனர். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது கூட சீனப் பொருட்களை வாங்க மறுக்கின்றனர்.
தற்போது ஸ்வீடன் நாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்’ என்றார்