Breaking: பா.ஜ.க வுடன் கட்சியை இணைத்தார் சரத்குமார்! சமக கலைந்தது! பா.ஜ.கவில் இணைந்தது! அதிரடி காட்டும் பா.ஜ.க!

BJP

BJP

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஓரிரு நாளில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத் குமார் இன்று சந்தித்துள்ளார்.பாஜக – சமக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நேற்றைய தினம் பாஜக குழுவினருடான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார, தற்போது மரியாதை நிமித்தமாக பா.ஜ.க குழுவினரை சந்தித்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர அண்ணாமலை மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அவர்கள் முன்னிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்து கொண்டார், மேலும் இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் பேசுகையில் ஆனால் சரத்குமார் அவர்கள் தேசியத்திற்கு தேவைப்படுகிறார்.தேசத்திற்கு அவரின் சேவை தேவை என கூறியுள்ளார்.

பாஜகவில் இணைந்துள்ளது குறித்து சரத்குமார் பேசுகையில் சீட்டுக்காக அரசியல் செய்யாமல் மக்களுக்காகவும் தேசத்திற்ககாவும் பணி செய்ய இந்த முடிவு எடுத்துள்ளேன் என்றார். மேலும் காமராஜர் போல் ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அவர்களின் பாதையில் செல்ல விரும்புகிறேன் என்றார்.மேலும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் எனவும் பேசினார்

Exit mobile version