BREAKING: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி… வேறொரு வழக்கிலும் கைதாக வாய்ப்பு?

SenthilBalaji-DMK

SenthilBalaji-DMK

அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது கடந்தாண்டு ஜூன் 13-ல் கைது செய்தது. அவர் மீது 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி, பைபாஸ் ஆபரேஷன் என பல விஷயங்கள் அரங்கேறியது. அதன் பின்னர் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு, மூன்று முறை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது

இந்த நிலையில் அவரது ஜாமின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபடாமல் தள்ளுபடியான நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். இருப்பினும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இன்று தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவலை 19 முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார் செந்தில் பாலாஜி. மேலும் இன்னும் 4 நாள்களில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு நடத்த உள்ளனர். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகிறது. மேலும் சில நாள்களில் செந்தில் பாலாஜி வேறு வழக்கு ஒன்றிலும் கைது ஆவார் என்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version