பிரேக்கிங் : சுக்குநூறானது இண்டி கூட்டணி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்..

10-bihar-congress-mla

10-bihar-congress-mla

பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் இண்டி கூட்டணி முடிந்து விடும் போல.. முடிந்து விட்டது என்றே கூறலாம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதீத பலம் வாய்ந்த பா.ஜ.கவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டி கூட்டணியையை முதலில் முதலில் ஆரம்பித்து வைத்தது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தான்.

இந்த நிலையில் இண்டி கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறார் இதற்காக இன்று பீகார் ஆளுநரை சந்தித்த நிதிஷ் குமார் பீகார் சட்டசபையை கலைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. இந்த மெகா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி ஆம்ஆத்மீ உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இருந்தது . இண்டி’ கூட்டணியின் நான்கு ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற்றன. மேலும் ஒரு கூட்டம் வீடியோ கான்பரசிங்க்கில் நடைபெற்றது

முதலில் இண்டி கூட்டணியை உதறியவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான். இதுவரை 5 முறை ஆலோசனை நடத்திய நிலையில், ஆரம்பம் முதலே பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டாமல் இருந்தார் மம்தா பானர்ஜி., மேற்கு வங்கத்தில், மம்தாவிடம் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக இடங்களை கேட்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 2 இடங்களை மட்டுமே தர முடியும் எனக் கூறிய மம்தா, கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடத்தையும் கொடுக்க முடியாது என கூறிவிட்டதாக தெரிகிறது.

இதனால் காங்கிரஸ் கடும் கோபத்தில் இருந்து வந்த நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என மம்தா அறிவித்து இண்டி கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தார். மேலும், மேற்கு வங்க வழியாக ராகுல் காந்தி நடத்தும் யாத்திரை குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இந்த இடியை தங்குவதற்குள் அடுத்த இடியை இண்டி கூட்டணியில் இறக்கினார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்தார்.அடுத்து தான் பேரிடியை இண்டி கூட்டணியில் இறக்கி கூட்டணியை சுக்குநூறாக செய்தார் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார். பீகாரில் ஏற்கனவே நிதிஷ் குமார் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிதிஷ் குமார் . பீகார் முதல்வர்பதவியை இன்று ராஜினாமா செய்தார் மேலும் இன்று மாலை மீண்டும் பா.ஜ.க ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பாஜக, ஜேடியூ மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வரானார்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.கவுடனான கூட்டணியை நிதிஷ்குமாரின் ஜேடியூ முறித்துக் கொண்டது. ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இதனடிப்படையில்தான் லோக்சபா தேர்தலுக்கும் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இண்டி கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் தீவிரம் காட்டினார். அப்படி உருவான இண்டி கூட்டணி இப்போது காங்கிரஸ் வசமாகிவிட்டது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தது. இது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. பீகாரின் கக்கன், காமராஜர் என போற்றப்படுகிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராக திகழ்ந்தவர் கர்பூரி தாக்கூர். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததால், பாஜகவையும் பிரதமர் மோடியையும் வானவளாவா புகழ்ந்து தள்ளினார் நிதிஷ்குமார்.

அத்துடன் நிற்காமல் போகிற போக்கில் வாரிசு அரசியலையும் வெளுவெளுவென வெளுத்துவிட்டார் நிதிஷ்குமார். முதலில் திமுகவை ஹிந்தி கற்க சொன்ன நிதிஷ் தற்போது வாரிசு அரசியலை வெளுத்து வாங்கியது காங்கிரஸ், லாலுபிரசாத், திமுகவை வெலவெலக்க செய்துள்ளது.

இதனிடையே “இண்டி ” கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணையவுள்ள நிதிஷ்குமார் முடிவு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இண்டி கூட்டணிக்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்கள்.

Exit mobile version