CAAக்கு எதிராக ஷாஹீன் பாக்ல் போராடியர்கள் பாஜகவில் இணைந்தனர்!

பாரத பிரதமர் மோடி அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 101 நாள் 24 மணி நேரமும் தொடர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களில்  50 க்கும் மேற்பட்டோர், பாஜகவில்இணைத்துள்ளனர். 

இதுகுறித்து பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில் “ முஸ்லிம்கள் மீது பாஜக எந்தவிதமான வேறுபாட்டையும் காட்டவில்லை, அவர்களைப் வளர்ச்சியின் மையத்துக்குள் கொண்டுவரத்தான் அரசு முயல்கிறது என்பதை உணர்ந்து, நூற்றுக்கணக்கான முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் பாஜகவில் இணைந்திருப்பது புதிய உற்சாகத்தை தருகிறது.

முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்தபின், பாஜகவில் இணைந்த முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும் நம்பிக்கை வைத்துள்ளதைத்தான் இது காட்டுகிறது.” எனத் தெரிவித்தார்.

பாஜக டெல்லி பொறுப்பாளர் ஷியாம் ஜாஜு கூறுகையில் “ யாரும் தேசியஅடையாளத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துவிட்டார்கள். சிஏஏ குறித்து பேச்சு எழுந்தபோது, சில அரசியல் கட்சிகள் முஸ்லிம் மக்களை தவறான பாதைக்குதிருப்பினர். ஆனால், அவர்கள் தற்போது எதையும் நிரூபிக்கத் ேதவையில்லை என்பதை உணர்ந்விட்டனர்.

யாருடைய வாக்களிக்கும் உரிமையும், குடியுரிமையும் பறிக்கப்படாது. பாஜக மூலம்தான் நீதி பெற முடியும் என்பதை உணர்ந்தபின், ஷாகீன் பாக் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமன முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இருந்த ஷாசாத் அலி, மருத்துவர் மீரான், ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகி தபாசம் ஹூசைன் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் சகோதரர்கள், சகோதரிகள் பாஜகவில் இணைந்தனர் என்று பாஜக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவகர் ஷாஜாத் அலி, மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் மெஹ்ரீன் மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி தபாசம் உசேன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் ஷாஹீன் பாக் போராட்டத்தில் நன்கு அறியப்பட்ட முகங்களாக இருந்தனர்.

Exit mobile version